பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9

உங்களுடைய தாய்மொழியும் குஜராத்தி, என்னுடையதும் அதுவே. அப்படியிருக்க நீங்கள் ஏன் ஆங்கிலத்தில் கேள்வி கேட்கிறீர்? நான் பல்லாண்டுகள் தென்னப்பிரிக்காவில் வாழ்ந்த காரணத்தால், என் தாய்மொழியை கான் மறந்து விட்டதாகத் தாங்கள் கருதுகின் மீரா ? அல்லது கான் ஒரு பாரிஸ்டர் என்ற காரணத்தால், என்னிடம் ஆங்கிலத்தில் பேசுவதுதான் கெளரவம் என்று கருதுகின்றீரா?”

இச் சொற்களைக் கேட்ட அப் பத்திரிகாசிரியர் மிகவும் வெட்கமடைந்தார், பி ற கு குஜராத்தியிலேயே பல கேள்விகள் கேட்டார். அடிகளும் விடையிறுத்தார். அடுத்த நாள் அடிகளின் சங்திப்பைப்பற்றித் தம் பத்திரி கையில் குறிப்பிடும்போது, அடிகளின் மொழிப்பற்றை விளக்கி அதற்கு முதலிடம் கொடுத்து எழுதியிருந்தார். அதைப் படித்த இத்திய மக்கள் பெரிதும் மகிழ்ங்தனர். தாய்மொழியின்மேல் பற்றுக்கொண்டு வாழும் ஒரு இந்தியத் தலைவராவது கிடைத் தாரே என்று பலர் மகிழ்ங் தனர். அப்போது இந்திய நாட்டுப் பத்திரிகைகள் எல்லாம் காங்தியடிகளின் செயலே ஒருமுகமாகப் பாராட்டத் தொடங்கின: அப்போது இந்திய நாடு முழுவதும் காங்கி யடிகளைப் பற்றியே பேச்சாக இருந்தது.

வெற்றிவீரராக இங்தியா திரும்பிய காங்தியாருக்குக் குஜராத்தி மக்கள் ஒரு பெரிய விருந்து கடத்தினர். காரணம், காந்தியடிகள் தம்முடைய மாநிலத்தைச் சேர்க் தவர் என்ற காரணத்தால் திருவாளர் ஜெகாங்கீர் பெடிட் என்பவர் பம்பாயில் அப்போது வாழ்ந்த பாரசீகக் கோடீசு வரர்களில் ஒருவர். அவருடைய ஆடம்பரமான அரண் மனையில் அந்த விருந்து ஏற்பாடாகியிருந்தது. இந்த விருங் துக்குப் பம்பாயில் வாழ்ந்த செல்வர்களும், பெரிய மனிதர்களும், அரசியல்வாதிகளும் வ ங் தி ரு ங் த ன ர்.