பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/230

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29.

lity) ஆகும். காலங் தவருமை எல்லோருக்கும் இயைந்த ஒன்று என்றாலும், சிறப்பாக அரசியல்வாதிகளுக்கு ஏற்றது. அதல்ைதான் காங்தியடிகள் காலங் தவருமையைத் தம் முடைய தலையாய கொள்கைகளில் ஒன்றாகக் கருதிக் கடைப்பிடித்து வங்தார் ; குறிப்பிட்ட காலத்தில் தம் முடைய வேலேகளைத் தவரும்ல் செய்து முடிப்பார். பிறர் காலங்தாழ்த்திச் செய்தாலும் கண்டிக்காமல் விட மாட்டார்.

காந்தியடிகள் வைகாளியில் சுற்றுப்பயணம் செய்து கொண்டிங்தபோது காள்தோறும் ஒவ்வொரு ஊராகச் செல்வது வழக்கம். இரவு அவ்வூரில் தங்கியிருந்து விட்டு அடுத்த நாள் காலேயில் குறிப்பிட்ட காலத்தில் அடுத்த ஊருக்குக் கிளம்புவார். ஒருநாள் காலை காங்தியடிகள் புறப்படத் தொடங்கினர். அவருக்குத் துணையாக வங்திருக்த அவருடைய பேத்தியான மனுபென் புறப்படுவதற்குச் சிறிது கால தாமதம் ஏற்பட்டது. அது அப் பெண்ணின் குற்றமல்ல. காந்தியடிகள் புறப்பட்ட பிறகுதான் அவ ருடைய பொருள்கள் சிலவற்றை மூட்டை கட்ட முடியும். அதனல் தான் காலதாமதம். உடனே காங்தியடிகளுக்குக் கோபம் வங்து விட்டது.

“மனு! நீ மிகவும் தவறு செய்கிறாய்! உனக்காக இங்கு எவ்வளவு பேர் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதைக் கவனித்தாயா? நீ இளம் பெண் முதியவனை என்னை ஒடி வங்து பிடித்துவிடுவாய்! ஆனால் உனக்காக இவர்கள் தங்க ளுடைய காலத்தை இழக்கிறார்கள்! இங்கு கிற்கும் நூற்றுக் கணக்கானவர்களில், ஒவ்வொருவரிடமிருந்தும் ஐ க் து கிமிடங்களே பறித்துக் கொள்வது எவ்வளவு பெரிய குற்றம் என்று உணர்ந்தாயா?” என்று கூறினர் காக்தி யடிகள்.