பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/239

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



துரங்கிவிழமாட்டாய். இவ்வாறு ஒரே கல்லில் நான் இரண்டு பறவைகளே அடிக்கிறேன்” என்று காந்தியடிகள் சொன்னர்.

k to:

காங்தியடிகள் நவகாளியில் சுற்றுப் பயணம் செய்து கொண்டிருந்தபோது, தேவிபுரம் என்ற இடத்தை அடைக் தார். அக்த ஊர் மக்கள் காங்தியடிகளே வரவேற்பதற்காக ஆடம்பரமாகச் செலவிட்டிருந்தனர். சுமார் 200 ரூபாய் வரையில் செலவாகி யிருக்கும். பொதுவாக ஒவ்வொரு ஊரிலும் எளிய முறையிலேயே அலங்காரங்களெல்லாம் இருக்கும். தென்னே ஒலேயை எங்கும் அலங்காரமாகப் பின்னி, வளைத்துக் கட்டியிருப்பார்கள். காங்தியடிகள் ஒவ் வொரு ஊரிலும் நுழைந்தவுடன் அவ்வூர்ப் பெண்டிர் அடி களின் நெற்றியில் திலகமிட்டு ஆரத்தி சுற்றி வரவேற்பார் கள். இவற்றைக் காங்தியடிகள் எப்போதும் எதிர்த்ததில்லை.

ஆனல் தேவிபுரமக்களோ, பூக்கள், வண்ணக் காகிதங் கள், பட்டு, வெள்ளி, தங்க கிறச் சரிகைகள் ஆகியவற்றைச் சக்தபுரத்திலிருந்து வாங்கி வந்து, அவற்றால் அலங்காரங் கள் செய்திருந்தனர். மிகவும் பெரிய அளவில் சரிகை வேலைப்பாட்டோடு கூடிய மாலையும் கட்டிவைத்திருங்தனர். இவற்றையெல்லாம் கண்ட காங்தியடிகள் மிகவும் சினங் கொண்டார். அவ்வூரின் தலைவர்களைப் பற்றியும் ஊர் மக்களைப் பற்றியும் காங்தியடிகள் விசாரிக்கச் சொன்னர் . அவ்வூரில் இங்துக்கள் 300 பேரும் 150 இசுலாமியர்களும் இருப்பதாக மனுகாக்தி, அடிகளிடம் கூறினுள். அவ்வூர் காங்கிரஸ் தலைவரைக் காந்தியடிகள் வரவழைத்தார் . ‘இவ்வளவு ஆடம்பரமாகச் செலவிடுவதற்குப் பணம் எங்கு பெற்றிர்?” என்று கேட்டார்.

‘பாபு உங்கள் வருகை இவ்வூருக்குப் புனிதமானது. ஆகையில்ை இங்குள்ள இங்துக்களிடம் மட்டும். எட்டணு