பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/240

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23.9

முதல் அவரவர் விருப்பம்போல் கொடுப்பவற்றை வகுல் செய்தோம். ரூ. 800 சேர்ந்தன. அப்பணத்தைக் கொண்டு இந்த ஏற்பாடுகளெல்லாம் செய்தோம்’ என்று அத்தலைவர் கூறினர்.

பாபுவின் சினம் எல்லே கடந்தது “இந்த ஆடம்பர மான அலங்காரங்களெல்லாம் உடனே அகற்றப்பட வேண்டும். இச்செயல்களால் நீங்கள் என்னே ஏமாற்ற எண்ணி இருக்கிறீர்கள் என்று கினைக்கிறேன். என்னு டைய வருகைக்கு இத்தகைய ஆடம்பரமான செயல்களைச் செய்வதன் மூலம், நீங்கள் வகுப்புக் கலவரத்தை மீண்டும் கிண்டி விடுகிறீர்கள். நான் இத்தகைய வரவேற்பை எப் பொழுதும் விரும்புவதில்லை. இத்தகைய மாலை எனக்கு எதற்கு கையில்ை நூற்ற கதர் மாலேயே போதும். அம் மாலேயால் இரண்டுவிதப் பயன் உண்டு. ஒன்று, அது மாலையாகப் பயன் படுகிறது. மற்றாென்று ஆடை நெய்யப்பயன்படுகிறது. இதல்ை உங்கள் கையில் அளவுக்கு மீறிப் பணம் இருக்கவேண்டும்; இல்லாவிட்டால் வகுப்புக் கலவரத்தால் துன்பமடைங்திருக்கும் இக்காலத் தில் இவ்வாறு செலவு செய்யத் துணிய மாட்டீர்கள்.

அதுவுமின்றி, நீர் ஒரு காங்கிரஸ் ஊழியர். ர்ே என்னு டைய நூல்களைப் படித்திருப்பதாகக் கூறுகிறீர். நீர் ஒரு எம். ஏ. பட்டதாரி என்று கூறிக் கொள்கிறீர். சிறையிலும் இருங்ததாகக் கூறுகிறீர். இடையில் குறுகிய கதராடையை உடுத்துக் கொண்டிருக்கிறீர். அப்படியிருக்க வெளி நாட்டுப் பட்டையும் காடாவை எவ்வாறு வாங்கினிர். இவைகள் யாவும் என் உள்ளத்தைப் புண்ணுக்கி விட்டன. இப்போது சமூக ஊழியர்களாக இருக்கும் நீங்கள், எதிர்காலத்தில் பொறுப் பான அரசியல் பதவிகளில் அமர்த்தப்படலாம். அப்போது நீங்கள் ஆடம்பரமாகப் பிறருக்கு மாலை அணிவிக்கவும், ஏற்றுக் கொள்ளவும் தயங்கமாட்டிர்கள் என்று எண்ணுகிறேன்.