பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/241

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

340

உங்களுடைய இச்செயல் என் கண்களைத் திறந்து எச் சரிக்கையளித்தது. உங்கள் உண்மைக்குறையை என்னிடம் மூடி மறைக்கப் பார்க்கிறீர்கள். ஆனால் இச் செயலின் மூலம் நான் எத்தகைய இடத்தில் இருக்கிறேன் என்று ஆண்டவன் எனக்குக் காட்டிவிட்டான். இன்னும் என்னென்ன கொடுமைகள் மறைந்திருக்குமோ என்று அஞ்சுகிறேன்” என்று அடிகள் கூறினர். உடனே அங் கிருந்த ஊழியர்கள் அலங்காரப் பொருள்களை எல்லாம் அரைமணி நேரத்தில் அகற்றிவிட்டனர். அம்மாலையிலிருந்த நூலே உருண்டையாகச் சுற்றச் சொன்னர். அதைத் துணி கெய்வோருக்கு வழங்கினர். பிறகு காங்தியடிகளுக்குக் கதர் மாலையும், 50 கெஜம் கதர்த்துணியும் வழங்கப் பட்டது. அத்துணியை ஏழை மக்களுக்கு அடிகள் வழங்கி விட்டார்.


காந்தியடிகள் 7-9-1947-இல் கல்கத்தா ஹைதரி மாளிகையிலிருந்து, வேற்றுாருக்குக் கிளம்புவதற்காக புறப் பட்டார். மனுகாக்தியும், அப்பாபெகனும் சாமான்களைக் கட்டிக் கொண்டிருந்தார்கள். காந்தியடிகள் வாயிலைக் கடந்து வெளியில் வங்தபோது, சில சிறுமிகள் மாலை களோடும் கைச்செண்டுகளோடும் காங்தியடிகளை வழியனுப் புவதற்காக வந்தார்கள். அவர்களில் மிகவும் சிறுமியாக இருந்த் ஒருத்தி அடிகளுக்கு ஆரத்தி சுற்றினுள். அடிகள் அக்குழங்தையைப் பார்த்து, ‘குழங்தாய் இந்த விளக்கை அணேத்து. இதிலுள்ள நெய் முழுவதையும் யாராவது ஒரு ஏழைக்குக் கொடு. எனக்கு ஆரத்தி சுற்றுவதற்காக இவ் வளவு கெய்யையா வீணுக்குவது? ஏழை, நெய்யைக் காண்பதற்குக்கூட வாய்ப்பு ஏற்படுவதில்லே’ என்று கூறினர். -