பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/255

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

1926-ஆம் ஆண்டு. திருவாளர் ஆண்ட்ரூஸ் சபர்மதியில் காங்தியடிகளோடு தங்கியிருந்தார். அவர் எப்போதாவது தம்முடைய பொதுப்பணிகளே ஒதுக்கி வைத்து ஒய்வு எடுத்துக் கொள்வதற்காகச் சபர்மதிக்கு வருவார்: ஏதாவது எழுத்து வேலையில் ஈடுபடுவார்.

அச்சமயத்தில் ஒருநாள் தென்னிந்தியாவிலிருந்து ஒரு இளைஞன் வங்திருந்தான். அவன் மாவட்டக் காங்கிரஸ் செயலாளராகப் பணியாற்றியவன். அரசியல் தொண்டில் ஈடுபடுவதற்காகத் தன்னுடைய ஆசிரியர்ப் பணியை விட்ட வன். அம்மாவட்டத்தின் காங்கிரஸ் குழுவின் கிதி அவன் பொறுப்பில் விடப்பட்டிருந்தது. அரசியற் பணிகளுக்காக அவற்றை அவன் செலவிட்டுவிட்டான். ஆல்ை அவைகட் குச் சரியான கணக்கு வைத்துக் கொள்ளவில்லை. ஆயிரம் ரூபாய்ச் செலவுக்குச் சரியான கணக்கில்லை. ஆல்ை அவன் குற்றமற்றவன் என்பது எல்லோருக்கும் தெரியும். அவ னுடைய காணயத்தில் எல்லோருக்கும் கம்பிக்கையுண்டு. இருந்தாலும் மாவட்டக் காங்கிரஸ் செயற்குழு “ஆயிரம் ரூபாய்க்கும் கணக்குக் காட்டு; இல்லாவிட்டால் பணத்தை வைத்துவிட்டு மறுவேலையைப் பார்’ என்று மென்னி யைப் பிடிக்கத் தொடங்கியது, இளைஞன் செய்வதறியாது திகைத்தான். வேறுவழியறியாத அவன் நேராகச் சபர்மதி வங்தான். தன் நிலையைக் காங்தியடிகளிடம் எடுத்துக் கூறினன். காந்தியடிகளும் பொறுமையோடு அவன் கூறுவதைக் கேட்டார். பல குறுக்குக் கேள்விகள் கேட்டு அவன் குற்றமற்றவன் என்பதை உணர்ந்துகொண்டார். இறுதியில் அவ்விளைஞனைப் பார்த்து, ‘கான் அதற்காக இப்பொழுது என்ன செய்ய வேண்டும்?’ என்று கேட் டார்.

“எங்கள் மாவட்டச் செயற்குழுவிற்கு என்னை மன் னித்து, அப்பணத்தைக் கேட்கவேண்டாமென்று ஒரு கடிதம் எழுதுங்கள்!” என்று கேட்டான்.