பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/256

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5

“என்ல்ை அப்படிச் செய்ய முடியாது! அதுவுமின்றி உன்னுடைய செயல் மன்னிக்க முடியாததாகும். பொதுப் பணத்தின் ஒவ்வொரு காசும் புனிதமான சொத்து. நீ அப் பணத்தைச் செலவிடுவதில் கண்ணும் கருத்துமாயிருக் திருக்க வேண்டும். நீ கணக்கில்லை என்று குறிப்பிடப்படும் ஒவ்வொரு காகம், என் கொள்கைப்படி உன்னல் கையாடப் பட்டதென்றே கருதப்படும். ஒரு பொதுத் தொண்டன் பொது கிதியின் கணக்கைச் சரியாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பது பணத்துக்காக அல்ல; அவன் நாணயத் துக்கும் கன்னடக்கைக்கும் தான்! இப்பொழுதும் ஒன்றும் குடி முழுகிப் போய்விடவில்லை. அப்பணத்தின் பெரும் பகுதிக்கு இன்றும் நீ பட்டியல் தேடலாம். ஆல்லாவிட் டால் அப்பணத்தை உன்னிடமிருந்து வசூல் செய்ய உங்கள் செயற்குழுவிற்கு நேரிய உரிமையிருக்கிறது. அவசியமேற் பட்டால் உன்னுடைய சொத்தையும் விற்று அப்பணத் திற்கு ஈடு கட்டவேண்டும்” என்று கண்டிப்போடு கூறினர் காங்தியடிகள்.

அவ்விளைஞன் பேயறைங்தவன்போல் பேங்தப் பேந்த விழித்தான். காங்தியடிகள் இவ்வாறு தயவு தாட்சணிய மின்றிக் கூறுவார் என்று அவன் சற்றும் எதிர்பார்க்க வில்லை. அவருடைய சாந்த முகத்தையும் கருணே ஒழுகும் கண்களையும் கணக்கிட்டுக் கொண்டு, அவருடைய இரக் கத்தை எதிர்பார்த்து ஓடிவங்தான். ஆனல் அவனுடைய அநுபவம் அவன் எதிர்பார்த்ததற்கு எதிர்மாருக இருந்தது. குழந்தையைப்போல் தேம்பித் தேம்பி அழத் தொடங் கின்ை. அருகில் அமர்ந்திருந்த ஆண்ட்ரூசின் உள்ளம் இரக் கத்தால் உருகியது.

‘தன் தவற்றை உணர்ந்து வருங்தும் ஒருவனிடம், தாங்கள் கடந்து கொள்ளும் முறை சரியல்ல” என்று அவர் அடிகளிடம் கூறினர்.