பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/258

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

357

பழக்கத்தையும் அடக்கிப் பழகிக் கொள்ளட்டும்” என்று கூறினர் காங்தியடிகள்.

“சபர்மதியிலிருந்து தென்னிந்தியாவுக்கு அவ்விளஞனே கடந்து செல்லச் சொல்லுவது அவ்வளவு பொருத்தமாகத் தோன்ற வில்லை’ என்று ஆண்ட்ரூஸ் கூறினர். காந்தி யடிகள் தம் முடிவில் உறுதியாக இருந்தார். இளைஞனும் வேறு வழியின்றி ஊருக்குக் கிளம்பின்ை.

‘ஊருக்குத் திரும்பிச் சென்று சரியாக நடந்துகொள்: பிறகு எனக்குக் கடிதம் போடு. ஆண்டவன் உனக்குதி துணை புரிவார்!” என்று காந்தியடிகள் அவ்விளைஞனைப் பார்த்துக் கூறினர்.

கீனபங்து ஆண்ட்ரூஸ் அவ்விளைஞனேடு புகைவண்டி கிலேயம் வரை நடந்து சென்றார். தம்முடைய சட்டைப் பையிலிருந்து முப்பத்தைங்து ரூபாயை எடுத்து அவ் விளேஞன் கையில் கொடுத்தார். பிறகு ஆசிரமத்துக்குத் திரும்பினர். நேராகக் காங்தியடிகளிடம் சென்றார்.

‘பாபு நான் உங்களிடம் மன்னிப்புக் கேட்க விரும்பு கிறேன்” என்று சொன்னர் இனபந்து.

“எனக்குத் தெரியும்! நீங்கள் அவனுக்குப் பணம் கொடுத்திருப்பீர்! அப்படித்தானே! நீர் திருத்த முடியாக ஆளய்யா!’ என்று கூறிச் சிரித்தார் காந்தியடிகள்.

காங்தியடிகள் பொதுப் பணத்தைச் செலவிடுவதைப் பற்றியும், அச் செலவினங்களைக் கணக்கு வைத்துக் கொள் வதைப் பற்றியும், தம் நூலில் குறிப்பிட்டுள்ளவற்றை இவ்விடத்தில் எடுத்துக்காட்டுவது மிகவும் பொருத்தம் என்று எண்ணுகிறேன்.

“பொது வேலைகளில் சில்லரைச் செலவுகளே பெருங் தொகைகளாகிவிடும் என்பதை கான் அறிந்தேன். எனவே ஆரம்பத்தில் ரசீதுப் புத்தகங்கள்கூட அச்சடிக்க வேண்டா மெனத் தீர்மானித்தேன். எனது அலுவலத்தில் சைக்