பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/260

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

259

பதின்மூன்றுகல் தொலைவில் உள்ள திறந்த வெளியொன் றில் மூன்று வாரம் வசிக்க வேண்டுமென்று ஏற்பாடா யிற்று. எல்லோரும் புறப்படத் தயாரானர்கள்.

அவரவர்களும் வெகுகாலமாகப் பாடுபட்டுத் தேடி ஏதோ கொஞ்சம் பணம் மீத்துவைத்திருந்தார்கள். பணத் தைப் பாங்கியில் போடுவதென்பது அவ்வேழைத் தொழி லாளிகளுக்குத் தெரியவே தெரியாது. அவர்கள் வாழ்ந்த குடிசையில் கிலத்தைத் தோண்டிப் புதைத்து வைத்திருங் தார்கள். மேற்படி சிறு தொகைகளே என்ன செய்வது என்பது பற்றிக் கவலேயுண்டாயிற்று. திறந்த வெளியில் வசிக்கப்போகும் இடத்திற்குப் பணத்தைக் கொண்டுபோக அவர்கள் உள்ளம் இடங்கொடுக்கவில்லை. திருட்டுப்போய் விட்டால் என்ன செய்வது? காந்தியடிகளிடம் முறை யிட்டார்கள்.

‘பாங்கியில் போடுங்கள்!” என்று காந்தியடிகள் கூறினர்.

“எங்களுக்குப் பாங்கியில் போடத் தெரியாது! போட் டால் திரும்பி வருமோ, என்னமோ? யார் கண்டது: பாங்கி யின் பக்கம் போவதே எங்களுக்குக் கடினம். உங்களிடமே கொடுத்து விடுகிருேம். நீங்கள் வைத்திருந்து திருப்பிக் கொடுத்து விடுங்கள்! உங்களிடம் பணம் இருங்தால் எங்களுக்குக் கவலையில்லே!’ என்று சொன்னர்கள்.

அந்த ஏழை மக்கள் தம்மிடத்தில் காட்டிய கம்பிக்கை அவர் உள்ளத்தை உருக்கியது. அவர்களுடைய பாங்கியாக இருந்து உதவ ஒப்புக் கொண்டார். இது எளிதான செயலல்ல. நூற்றுக் கணக்கான இந்தியர்கள் தங்களுடைய சேமிப்புப் பணத்தைக் கொண்டு வங்து கொடுத்தார்கள். பெரும்பாலும் செப்புக் காசுகளும் வெள்ளி நாணயங்களு மாக வந்து குவிந்தன. இவற்றையெல்லாம் எண்ணி எடுத்துக் கொண்டு அவரவர்கள் பேரில் கணக்கெழுத வேண்டும். அவ்வளவு நாணயங்களையும் காந்தியடிகளால்