பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/261

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260

எப்படி வைத்திருக்க முடியும்? தம்முடைய பெயரில் பாங்கிக்குக்குத்தான் அனுப்ப வேண்டும். பிளேக் நோய்ப் பகுதியிலிருந்து வங்தவை என்று பாங்கிக்காரர்கள் எடுத்துக்கொள்ள மறுக்கக் கூடும். பாங்க் கிருவாகியைக் கண்டு கேரில் பேசி ஏற்றுக் கொள்ளுமாறு செய்தார். நாணயங்களையெல்லாம் மருந்து நீரில் கழுவித் தாய்மைப் படுத்திப் பாங்கிக்கு அனுப்பினர். மொத்தம் 60,000 பவுன் காந்தியடிகளிடம் அவ்வேழை மக்களால் ஒப்படைக்கப் பட்டது. அவ்வளவையும் காத்துக் கணக்கு வைத்திருந்து, பிறகு திருப்பிக் கொடுத்தார்.

18. பிடிவாதம்

இந்தியாவிலுள்ள சுதேச சமஸ்தானங்களே மேற் பார்வையிட ஆங்கில அரசாங்கம் பொலிடிகல் ஏஜெண்டு’ என்ற அதிகாரிகளே அமர்த்திக் கொண்டு வந்தார்கள். ஒரு சமயம் ஒரு பொலிடிகல் ஏஜெண்டு இராச கோட்டை மன்னரைப்பற்றிச் சிறிது மதிப்புக்குறைவாகப்பேசினராம். உடனே அங்கு திவானக இருந்த திருவாளர் காபா காந்தி (காங்தியடிகளின் தந்தை) குறுக்கிட்டு எதிர்ப்புத் தெரிவித் தாராம். பொலிடிகல் ஏஜெண்டு துரை, அப்பொழு தெல்லாம் ஆணவம் படைத்திருந்த ஆங்கில அரசாங்கத்தின் பிரதிநிதியல்லவா? துரைக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்து விட்டது. காபாகாங்தி உடனே தம்மிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று துரை சொன்னராம். திரு. காபா காந்தி முடியாது’ என்றா ராம். துரை அவரை காவலில் வைத்தாராம். அதற்கும் மன்னிப்புக் கேட்க இணங்க வில்லையாம். சிலமணி நேரத்துக்குப் பிறகு, பொலிடிகல் ஏஜெண்டு அவரை விடுதலே செய்து விட்டாராம்.

தங்தையிடம் இருந்த பிடிவாத உணர்ச்சி, காங்தியடி களிடம் ஆயிரம் மடங்கு பெருகி வளர்ந்திருந்தது. சிறங்த