பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

இவ்வாறு பல பேரறிஞர்களின் அறிவுரைகளேக் காங்தியடிகள் பெற்றிருந்தாலும் வழக்கறிஞர் தொழிலில் அவருக்குப் பிடிப்பு ஏற்படவில்லை. முதன் முதலாக அவர் எடுத்துக்கொண்ட வழக்கே அவருக்கு அவமானத்தை விளேவிப்பதாக முடிந்தது. வழக்கறிஞர் தொழிலுக்கு முழுக்குப் போட்டுவிட்டு விண்ணப்பம் எழுதுபவராகக் கொஞ்சநாள் காலம் கழித்தார்.

காந்தியடிகள் கடத்திய வழக்கறிஞர் தொழில் எந்த கிலேமையில் இருந்தது என்று அவருடைய தென்னுப்பிரிக்க நண்பர் திருவாளர் ஹென்றி எஸ். எல். போலக் என்பார் எழுதியுள்ளவற்றை இங்குக் குறிப்பிட விரும்புகிறேன்.

‘திரான்ஸ்வால் உயர்நீதி மன்றத்தில் காங்தியார் வழக் கறிஞராகப் பணியாற்றி வங்தார். வழக்கறிஞர் கூட்டத் தில் அவருக்கு நல்ல மதிப்பு இருந்ததென்றும், வழக்கு மன்றமும் அவர் பால் பெருமதிப்புக் கொண்டிருந்த தென்றும் கான் கேள்விப்பட்டேன். தம்முடைய கட்சிக் காரன் தமக்குக் கொடுக்க வேண்டிய தொகையைக் கொடுக்காவிட்டால் அவனைத் திரும்பக் கேட்கும் வழக்கம் அவரிடம் இல்லே யென்றும் அறிந்தேன். ஒரு வழக்கை எடுத்து நடத்தும்போது, அவ்வழக்கிற்குரிய கட்சிக்காரன் பொய் பேசித் தம்மை ஏமாற்றுவதாக அறிந்தால், காந்தி யடிகள் அவ்வழக்கைத் தொடர்ந்து கடத்த மறுப்பதோடு, அவனிடம் பெற்ற பணத்தையும் திருப்பிக் கொடுத்து விடுவார். இந்த நிபந்தனையை முதலில் கூறிய பிறகே எந்த வழக்கையும் அவர் எடுத்துக் கொள்வார். வழக்கறிஞன் என்பவன் உண்மையின் பிரதிநிதியாக இருக்கவேண்டுமே தவிர ஏமாற்றுக்காரரின் பிரதிநிதியாக இருக்கக் கூடாது என்பது அவருடைய அசைக்க முடியாத கொள்கை. வழக்கை எற்று நீதிமன்றத்தில் கடத்திக் கொண்டிருக்கும் போது, தம் கட்சிக்காரன் உண்மைக்குப் புறம்பாக கடந்து