பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/271

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270

தான் என்னல் கவலையின்றி வாழ முடிகிறது” என்று கூறினர்.

அவர் குழங்தைகளிடம் பேசும்போது குழங்தை யாகவும், வாலிபர்களோடு பேசும்போது வாலிபராகவும், வயது முதிர்ந்தவரோடு பேசும்போது வயது முதிர்ந்தவ ராகவும் தென்படுவார். அரசியல்வாதிகளோடு அரசியலைப் பற்றி ககைச்சுவையோடு பேசுவார்; குடும்பிகளோடு பேசும் போது குடும்பத்தைப்பற்றி நகைச்சுவையாகப் பேசுவார். ஆனல் அவர் வீசும் ஒவ்வொரு ககைச்சுவைத் துணுக்கிலும், சக்தி வாய்ந்த ஒரு உண்மை புதைங்திருப்பதைக் கூர்ந்து கவனிப்பவர்கள் உணராமற் போகார், சிரித்துப் பேசும் போதுகூடக் கருத்தற்ற சொற்களைச் சொல்லமாட்டார்; பயனற்ற வெற்றுச்சொல் ஒன்றுகூட அவர் வாயிலிருந்து வெளிவருவதைக் காண முடியாது.

ஒருநாள் சபர்மதி ஆசிரமத்தைவிட்டு, மாலையில் உலாவுவதற்காகக் காங்தியடிகள் புறப்பட்டுக் கொண்டிருங் தார். அப்போது அங்கிருந்த ஆசிரமச் சிறுமி ஒருத்தியும் அடிகளோடு உலாவக் கிளம்பினள். அவளுடைய ஆடை யில் ஒரு பாதி மையில்ை கனேங்திருந்தது. அவளுடையமைப் புட்டியை உடைத்துவிட்டாள் போல் இருக்கிறது. அங்த மை அவளுடைய ஆடையில் கொட்டிப் பாதிப் பகுதியைக் கருப்பாக்கிவிட்டது அவ்வாடையை மாற்றிக் கொண்டு வருவதற்குச் சோம்பேறித்தனப்பட்டு.அப்பெண் அப்படியே வந்து விட்டாள். இதைக் காந்தியடிகள் கவனித்தார்.

“ ஒl என்ன பாப்பா! நீ கங்கையையும் யமுனையையும் ஒன்றாகக் கொணர்ந்திருக்கிறாய் ? “ என்று சிரித்துக் கொண்டே கேட்டார். அதைக் கேட்ட எல்லோரும் சிரித் தார்கள். அச் சிறுமிக்கு அடிகள் கூறிய நகைச்சுவையின் பொருள் விளங்கவில்லை. அதை அறிந்துகொள்ளப் பெரிதும் விரும்பினள். பிறகு காங்தியடிகளே அதை விளக்கிக் கூறத் தொடங்கினர்.