பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/276

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

275

நோய்கள் பெற்றாேரிடமிருந்து கமக்கும் வருவதுண்டு’ என்றார்

“இருக்கலாம். ஆனல் என் வயிற்றிலுள்ள கீரிப்பூச்சி களும், கழிச்சல் கிருமிகளும் நான் என் பெற்றாேரிட மிருந்து பெற்றவையல்லl காலஞ்சென்ற சி. ஆர். தாஸ் அவர்களும் மோதிலால் நேருவும் ஹோமியோபதி மருத்து வத்தை ஒரு தடவை முயன்று பாருங்கள் என்று எனக்குச் சொன்னர்கள். அவர்களுக்கு அதில் ஒரு பிரியம். ஆனல் எனக்கு ஹோமியோபதி மருத்துவத்தில் கம்பிக்கை கிடை யாது. எனக்குப் பிடித்தமானது இயற்கை மருத்துவ முறைதான். நான் இப்போது உங்கள் உதவியை நாடக் காரணம் அல்லோபதிக் மருத்துவ முறையில் எனக்கு கம்பிக்கையின்மைதான். அதோடு கடவுளின் உதவியையும். பஞ்ச பூதங்களின் உதவியையும் கொண்டு கோயைத் தீர்த்துக் கொள்ளும் நம்பிக்கை கொள்வதற்குரிய மன உறுதி இப்பொழுது இல்லை” என்றார் காங்தியடிகள்.

“மகாத்மாஜி! உங்களுக்கு எந்த மருந்துமே வேண்டிய தில்லை. உணவை ஒழுங்கு படுத்திக்கொண்டு வாழ்ந்தால், அதுவே போதும்’ என்று கூறிவிட்டு மருத்துவர் புறப்படு வதற்கு எழுந்தார். புறப்படத் தொடங்கும் கேரத்தில் அவர் அடிகளைப் பார்த்து, “பாபு என்னேடு என் மாணவி ஒருத்தி வந்திருக்கிருள். அவள் தங்களைக் கண்டு பேச வேண்டும் என்று பெரிதும் விரும்புகிருள். அவள் ஒரு அழகிய குஜராத்திப் பெண்’ என்றார்,

“எல்லாக் குஜராத்திப் பெண்களும் அழகாகத்தான் இருக்கிறார்கள்!’ என் ருர் காங்தியடிகள்.

“எல்லாக் குஜராத்திப் பெண்களும் என்று சொல்லா தீர்கள்! எல்லாப் பெண்களுமே அழகிகள்! என்று கூறுங் கள்’ என்றார் மருத்துவர்.