பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/277

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

376

“இருக்கலாம். ஆளுல் சிறப்பாகக் குஜராத்திப் பெண்டிரே அழகிகள். அதிருக்கட்டும்! அங்தப் பெண்ணே இழுத்துக் கொண்டு எங்காவது ஓடிவிடாதீர்!’ என்று கூறினர் காந்தியடிகள்.

மருத்துவர் திக்குமுக்காடிப் போனர். “நான் அப்படிச் செய்வேன் என்று எப்படிக் கூறுகிறீர் மகாத்மாஜி எனக்கு அறுபது வயதுக்கு மேலாகிறது. அப்படியிருக்கும் போது, நான் எங்தப் பெண்ணை இழுத்துக்கொண்டு ஒட முடியும்?’ என்றார் மருத்துவர்.

“ஏன் முடியாது. அறுபது வயதைக் கடந்த ஒரு கிழம், ஒரு ஃபிரெஞ்சுக் குமரியை இழுத்துக் கொண்டு ஓடிய கிகழ்ச்சியை கான் அறிவேன்” என்றார் காங்தியடிகள். அங்கிருந்தவர்கள் வீடே அதிர்ந்து போகும்படி சிரித்தார் கள். சிரிப்பு அடங்கியதும், “என்னுடைய இரத்தக் கொதிப்பை நான் இவ்வாறுதான் தணித்துக் கொள் கிறேன்” என்று கூறினர். நகைச்சுவை, நோய்க்கு மருந்து என்பது அவர் கொள்கை.

 to:

1947-ஆம் ஆண்டு அக்டோபர் 2-ல் காங்தியடிகளின் பிறந்த நாள் வந்தது. அவர் வழக்கம்போல 2 மணிக்கே எழுந்து விட்டார். 3-30 மணிக்குத் தொழுகை கடந்தது. பிர்லா மாளிகையிலிருந்த பலரும் காந்தியடிகளின் முன்கூடி விட்டனர். ஒவ்வொருவராகக் காங்தியடிகளை வணங்கினர். மனுகாங்தியும் வணங்கிள்ை. அவள் காங்தியடிகளே கோக்கி, ‘பாபு இன்று உங்களுடைய பிறந்த நாள். நீரல்லவோ எல்லோரையும் வணங்கி ஆசி பெறவேண்டும். அப்படி யிருக்க எங்களுடைய வணக்கத்தையன்றாே நீங்கள் ஏற்றுக் கொண்டு அமைதியாக இருக்கிறீர்கள். இது கன்றாக இல்லை” என்று தன் கிண்டலத் துவக்கிள்ை.