பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/279

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278

கூடாதா?’ என்று கேட்டார். கப்பல் தலைவர் மோகன தாசைத் தலைமுதல் கால்வரை ஒரு தடவை உற்றுப் பார்த் தார். அவருடைய தோற்றம் எதேைலா கப்பல் தலைவரின் உள்ளத்தைக் கவர்ந்தது.

“என்னுடைய சொந்த அறையிலேயே இன்ைெருவரும் பிரயாணம் செய்ய இடம் இருக்கிறது. அங்த இடத்தைச் சாதாரணமாய் வேறு யாருக்கும் கொடுப்பதில்லை. வேண்டு மால்ை உமக்குத் தருகிறேன்” என்று கப்பல் தலைவர் கூறினர். மோகனதாஸ் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண் டார்.

 to:

காந்தியடிகள் 1901-ஆம் ஆண்டில் கல்கத்தா காங்கிர சுக்குச் சென்றிருந்தார். இந்திய காட்டுக்குக் கல்கத்தா அப்போது தலைநகராயிருந்தது. சட்டசபைக் கூட்டம் கடக்கும்போது திரு. கோகலே அங்குதான் தங்கியிருப்பார். அதற்காகத் தனியான ஒரு வீடு வாடகைக்கு எடுத்துக் கொண்டு அவர் அங்கு வாழ்ந்தார். காங்தியடிகள் சிலநாள் அங்கு விருந்தாளியாகத் தங்கியிருந்தார். அவரோடு ஒரு மாதம் கழித்த பிறகு, காங்தியடிகள் இங்தியா முழுவதும் ஒரு முறை மூன்றாம் வகுப்புப் புகை வண்டியில் பயணம் செய்து சுற்றிப் பார்ப்பதென்று முடிவு செய்தார். அவருடைய வாழ்க்கையில் மூன்றாம் வகுப்பில் பயணம் செய்வது இதுதான் முதல் தடவை. மூன்றாம் வகுப்புப் பிரயாணிகளின் துன்பங்களே கேரில் கண்டு பரிகாரம் தேட வேண்டுமென்பது அவர் விருப்பம். அதேைலயே அவர் முன்றாம் வகுப்பில்செல்ல முடிவுசெய்தார். பன்னிரண்டளு பெறுமானமுள்ள கித்தான்பை ஒன்றைக் காங்தியடிகள் வாங்கிக் கொண்டார். அதில் ஒரு முரட்டுக் கம்பளிச் சட்டை, ஒரு வேட்டி, ஒரு துண்டு, ஒரு பனியன் இவற்றை வைத்துக் கொண்டார். இந்தப் பையைத் தவிர, ஒரு