பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37

கொள்கிருண் என்பதை உணர்ந்தால், உடனே அவர் திே பதியிடம் மன்னிப்புப் பெறுவதோடு, வழக்குக் குறிப்பு களேயும் வீசி எறிந்துவிட்டுச் சென்று விடுவார். இது போன்ற ஒரு நிகழ்ச்சியை நான் கேரில் கண்டிருக்கிறேன். சிக்கலான வழக்குகள் தம்மிடம் வரும்போது, அவ்வழக்கிற் குரிய இரு கட்சியினரையும் கேரில் வரவழைத்து, “நீங்கள் ஏன் வழக்குமன்றம் ஏறிப் பெரும்பொருளேப் பாழாக்கு கின்றீர்கள். நீங்கள் சமாதானமாகப் போய் விட்டால் பொருளும் மிச்சமாகும், தொல்லேயும் ஒழியும்” என்று எடுத்துக் கூறுவார். தாதா அப்துல்லா கம்பெனியாரின் வழக்கு சம்பந்தமாகக் காந்தியடிகள் முதன் முதலாகத் தென் ஆப்பிரிக்கா வந்தார். பல்லாண்டுகள் கடந்து வந்த அவ்வழக்கை, இவர் சமாதான முறையிலே தீர்த்து வைத் தார். இவர் ஒரு பாரிஸ்டராக இருந்தாலும், ஆலோசக ராகவே (Solicitor) பெரும்பாலும் தொழிலாற்றினர்.”

திருவாளர் போலக் கூறும் இக்கூற்றுக்களே வைத்துக் கொண்டு ஆராய்ந்தால், வழக்கறிஞர் தொழில் புரியும் போதுகூடக் காங்தியடிகள் வாய்மையிலிருந்து அணுவும் தவறவில்லே என்பது புலகுைம். காங்தியடிகள் மாணுக்க ராக இருந்தபோதே வழக்கறிஞர் தொழில் பொய்த் தொழில் எனக் கேள்விப்பட்டிருந்தார். இதை அவர் சிறிதும் பொருட்படுத்தவில்லை. ஏனெனில் பொய் சொல்லிப் பணமோ, உதவியோ தேடும் எண்ணம் அவருக்குக் கிடை யாது. தாம் எடுத்துக்கொண்ட வழக்கிலுள்ள குற்றத் தைத் தாமே நீதிமன்றத்தில் எடுத்துக் கூறும் வழக் கறிஞரை எங்காவது கண்டிருக்கிருேமா? அவ்வாறு கூறும் வழக்கறிஞனைப் பைத்தியக்காரன் என்றுதான் உலக மக்கள் எண்ணுவர். காங்தியடிகள் ஒரு முறை தம்முடைய வழக்கிலுள்ள குற்றத்தை நீதிபதியிடம் எடுத்துக் கூறினர். எதிர்க்கட்சி வழக்கறிஞரும் நீதிபதியும் வியப்படைந்தனர். அவருடைய கேர்மையைப் பாராட்டி, அவர் எடுத்துக்