பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/282

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 I

வகுப்பாரில் சிலர் தாங்களாகவே ஏழைகளின் அந்தஸ்தை ஏற்க முன்வரவேண்டும். அவர்களும் மூன்றாம் வகுப்பில் பிரயாணம் செய்ய வேண்டும். ஏழைகளுக்குக் கிடைக்காத எந்த வசதியையும் தாங்கள் பெறக்கூடாது. பிரயாணத் தில் ஏற்படும் அவ மதிப்புக்களுக்கும் அதிேகளுக்கும் தலை குனிந்து போகாமல் அவற்றைத் தொலைப்பதற்காகப் போராட வேண்டும்.”


காந்தியடிகள் 1947-ஆம் ஆண்டு காஷ்மீரிலிருந்து. கல்கத்தாவுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். வண்டி அமிருதசரஸ் புகைவண்டி கிலேயத்தை அடைந்தது. மழை பிடித்துக் கொண்டது. காங்தியடிகள் ஏறிச்சென்ற பெட்டி ஒழுகத் தொடங்கியது. உட்காரும் இடமெல்லாம் கனேந்து ர்ே தேங்கத் தொடங்கியது. இதை உணர்ந்த இரயில்வே .கார்டு காங்தியடிகளிடம் வங்து, வேறொரு பெட்டிக்கு மாறிச் செல்லுமாறு கேட்டுக் கொண்டார்.

காந்தியடிகள் அவரைப் பார்த்து, “அப்படி யென்றால் இந்தப் பெட்டியை என்ன செய்யப் போகிறீர்கள்?” என்றார்.

“உங்களுக்காக காங்கள் வேறொரு பெட்டியைக் காலி செய்திருக்கிருேம். அப் பெட்டியிலிருந்த மக்கள் இதற்கு மாற்றப்படுவார்கள்’ என்று கூறினர் கார்டு.

“இந்தப் பெட்டி மற்ற மக்களுக்குப் பயன்படும் என்றால், கான் என் இதிலேயே பயணம் செய்யக்கூடாது. மற்ற மக்களுக்குத் தொல்லே கொடுப்பதன் மூலம் கான் என்னுடைய வசதிகளைத் தேடிக்கொள்ள விரும்பவில்லை” என்றார் அடிகள்.

‘கார்டு வேறு எதுவும் பேசவில்லை. காங்தியடிகளின் பிடிவாத உணர்ச்சியை அவர் அறிவார் போலும். “நான் தங்களுக்கு வேறு ஏதாவது உதவி செய்ய வேண்டுமானல் செய்கிறேன்” என்றார் கார்டு.

. 18