பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/287

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286

“கான் செய்வதை இவ்வூர் மக்கள் பார்க்க வேண்டும் என்பதற்காகவே நான் இச் செயலைச் செய்கிறேன். அப்போது தான், காளே இவர்கள் இத்தெருவை அசுத்தம் செய்யமாட்டார்கள்’ என்று கூறினர் காங்தியடிகள்.

“சரி! இவ்வூர் மக்கள் மீண்டும் அசுத்தம் செய்தால் என்ன செய்வீர்கள்?’ என்று மனு கேட்டாள்.

“இவர்கள் இப்பாதையை மீண்டும் அசுத்தம் செய் கிறார்களா என்பதை அறிவதற்காக உன்னை அனுப்புவேன். அவர்கள் மீண்டும் அசுத்தம் செய்தால் நான் மறுபடியும் வங்து தாய்மைப்படுத்துவேன்’ எ ன் று காங்தியடிகள் சொன்னர்.

அதன்படியே காங்தியடிகள் மனுகாக்தியை அடுத்த நாள் அனுப்பி அப்பாதை தூய்மையாக இருக்கிறதா என்று பார்த்து வரச் சொன்னர். மனுவும் அவ்வாறே சென்றாள். ஒரிரு இடங்களில் அசுத்தம் செய்து வைத்திருந்தார்கள். மனு உடனே அவைகளே அப்புறப்படுத்தத் தொடங்கிள்ை. உடனே அங்கிருந்த கிராமவாசிகளும் அப்பணியில் பங்கு கொண்டனர். மீண்டும் இவ்வாறு அசுத்தம் ஏற்படாமல் பார்த்துக் கொள்கிருேம் என்று உறுதி கூறினர். மனு, காந்தியடிகளிடம் வங்து நிகழ்ந்ததைச் சொன்னாள்.

“அப்படி யென் ருல் அச்செயலை நீ செய்ததன் மூலம் கான் அடைய வேண்டிய சிறப்பைத் தட்டிப் பறித்துக் கொண்டாய்” என்று கூறிச் சிரித்தார். அன்றிலிருந்து அத் தெருவில் வாழ்ந்த மக்கள் அத் தெருவை அசுத்தம் செய்வதில்லை.

காந்தியடிகள் இதைப்பற்றி மீண்டும் குறிப்பிடும் போது, “அத்தெரு மக்கள் தங்கள் வாக்குறுதியைக் காப் பாற்றுவதன் மூலம் இரண்டு வித நன்மைகளே அடைகிறார் கள். ஒன்று, தூய்மையைக் கடைப்பிடிப்பது; மற்றாென்று சொன்ன சொல்லைக் காப்பாற்றுவது’ என்று கூறினர்.