பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/288

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

287

காங்கியடிகள் பெலியகட்டாவில் ஹைதரி மாளிகையில் தங்கியிருந்தார். அவரைக் காண்பதற்காக ஆயிரக்கணக் கான மக்கள் வாயிலில் கூடியிருந்தனர். பாபு வெளியில் வந்து அவர்களே எல்லாம் உட்காரும்படி கையமர்த்தினர். அவர்கள் போடும் இரைச்சல் தாங்க முடியாததாக இருக் கிறது என்பதை விளக்கிக் கூறினர். அம் மக்கள் அமைதி யடைந்தனர். பிறகு காங்தியடிகள் வெறும் காலோடு வெளியில் கிளம்பினர். அவ்வாறு காலில் செருப்பணி யாமல் சென்றால் தான், வழியெல்லாம் எச்சில் துப்பி அசுத்தம் செய்திருப்பவர்கள் தங்கள் தவற்றை உணர் வார்கள் என்று எண்ணினர். அவருடைய எண்ணம் பலித்தது. அன்றிலிருந்து மக்கள் பாதைகளில் எச்சில் துப்புவதை கிறுத்திக் கொண்டார்கள்.

23. தொழுகை

காந்தியடிகள் 30-8-1947-ல் பெலியகட்டாவில் ஒரு கூட்டத்தில் பேசுவதற்காகச் சென்றிருந்தார். அக் கூட்டத்தில் லட்சக்கணக்கான மக்கள் காந்தியடிகளைக் காண்பதற்காகக் கூடியிருந்தனர். முதலில் தொழுகை ஆரம்பமாயிற்று. இராமகாம பஜனே கடந்தது. தொழுகை முடிங்தவுடன் கூட்டத்தினர் எல்லோரும் கைதட்ட ஆரம் பித்தனர். உடனே காங்தியடிகள் அம்மக்களே நோக்கி, “தொழுகை என்பது நாடகக் காட்சியோ, திரைப்படக் காட்சியோ அல்ல கைதட்டுவதற்கு! இது கண்காட்சியு மல்ல! இது கடவுளே கினேவுகூரும் கூட்டம். எனவே தொழுகைக் கூட்டத்தில் கைதட்டுவது தவறு!” என்று குறிப்பிட்டார்.

ஒருநாள் காங்தியடிகளின் தொழுகைக் கூட்ட மொன்றில் இறுதியாக வந்தேமாதரம் பாடல் பாடப்