பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/294

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29.3

மேற்கண்டவாறு காங்தியடிகள் எழுதி முப்பதாண்டு கட்கு மேல் ஆகிவிட்டன. இன்றும் காசி நகரமும் விசுவ நாதர் ஆலயமும் அவர் பார்த்த கிலேயிலேயே இருக்கின் றன. 1927-ஆம் ஆண்டு காந்தியடிகள் கதர் கிதி திரட்டத் தமிழ்நாடு வந்தபோது, காரைக்குடியில் இங்துக் கோயில் கள் வேசையர் இல்லங்களாகி விட்டன” என்று வெறுத் துரைத்தார். கோவில்களில் வேசையர் கடம் புரிதல், வாணிபஞ் செய்தல் முதலிய இழிவுகள் காக்தியடிகட்குப் பிடிப்பதில்லை.

26. சோம்பலின்மை

அரசியல்வாதிகளுக்கு எப்போதுமே வேலையதிகம். அதுவும் காந்தியடிகளைப் போன்ற அரசியல் தலைவர்களுக்கு ஒய்வே கிடையாது. காள்தோறும் வரும் நூற்றுக்கணக் கான கடிதங்களைப் படித்துப் பதில் எழுவேண்டும்: பத்திரிகைகளுக்குக் கட்டுரை எழுத வேண்டும்; தன்னைத் தேடி அடிக்கடி வரும் தொண்டர்களுக்கும் நண்பர்களுக் கும் யோசனை கூறவேண்டும்; பொதுக் கூட்டங்களில் கலந்து கொள்ளவேண்டும். இவைகளல்லாமல் வேறு பல சொந்த வேலைகளையும் காங்தியடிகள் கவனித்து வங்தார். இவ்வளவு வேலைகளையும் ஒழுங்கு படுத்திச் சோம்பலில்லா மல் குறிப்பிட்ட காலத்தில் செய்து வந்தார்.

காந்தியடிகள் எப்பொழுதும் அதிகாலையில் 4 மணிக்கு முன்பாகவே எழுங்து விடுவார். காலேக்கடன்களே முடித்துக் கொண்டு தொழுகைக் கூட்டத்தில் கலந்து கொள்ளுவார். தொழுகைக்குப் பிறகு இளேப்பாறுவார்; அல்லது ஏதாவது எழுதுவார். அப்பொழுது எலுமிச்சம்பழச் சாறும், தேனும் கலந்த வெங்கீரை அருங்துவார். இதன் பிறகு உலாவச் செல்வார்.