பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/295

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29 #

உலாவிவிட்டுத் திரும்பும்போது, ஆசிரமத்தில் கோப் வாய்ப்பட்டுப் படுத்திருப்பவர்களைக் கண்டு, அவர் கலன் களே விசாரித்து வருவார். பிறகு சமையற்கூடத்திற்குச் சென்று தம் பங்குள்ள வேலையைச் செய்துவிட்டுச் சிற்றுண்டி சாப்பிடுவார்.

இதன் பிறகு தம்மைப் பார்க்க வந்தவரோடு உரை யாடுவார்; கடிதங்களுக்குப் பதில் எழுதுவார்; பத்திரிகை களுக்குக் கட்டுரை எழுதுவார். நடுப்பகல் உணவு நேரத்தில் இவரே மற்றவர்களுக்கு விருப்பத்தோடு பரிமாறுவார்.

பிற்பகலில் கவருமல் இராட்டையில் நூல் நூற்பார்; குறைந்தது ஒரு மணி நேரம் நூற்பார்.

மாலையில் சூரியன் மறைவதற்கு முன்பாகவே உண வருங்துவார். பிறகு சிறிது நேரம் உலாவப் போவார். மாலை 7 மணிக்கு மணியடித்ததும் தொழுகைக்குத் திரும்பி விடுவார். இவற்றைத் தவிரத் தாம் ஏற்படுத்திக்கொண்ட வேலே அட்டவணையின்படி சில சமயம் ஆசிரமக் குழந்தை களுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பார்.

இவ்வாறு காள் முழுதும் வேலை செய்தபின் இரவு 9-80 மணிக்கு உறங்கச் செல்வார். ஆனல் சில சமயங்களில் வேலை மிகுதியில்ை இரவில் வெகு நேரம் கண் விழித்து வேலையை முடிக்க வேண்டியிருப்பதுண்டு. இவ்வாறு கேரம் தாழ்த்தித் தாங்கிய போதிலும் காலையில் மட்டும் கான்கு மணிக்கு எழத் தவறுவதில்லை.

27. நாணம்

“நாண உணர்வு சில சமயங்களில் இச்செயல்களி லிருந்து காப்பாற்றுகிறது என்பது காங்தியடிகளின் கொள்கை, அக் கொள்கைக்கு ஏற்ப அவர் வாழ்க்கையில் பல கிகழ்ச்சிகள் கடந்தன. காந்தியடிகளை மகாத்மா”