பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/296

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

295

என்று உலகம் போற்றுகிறது; மாங்தருள் தெய்வமாக மக்கள் அவரைக் கருதுகின்றனர். இதே காங்தியடிகள் இளமையில் பல தவறுகள் செய்திருக்கிறார் இயற்கையாக அவர்பால் படிந்திருங்க நாணம் அவரைப் பலதடவை தவறு செய்யாதவாறு காத்திருக்கிறது. இளமையில் காந்தியடிகள் சில தீய நண்பர்களுடன் சேர்ந்துகொண்டு சுருட்டுக் குடித் தார்; திருடினர்; புலால் உண்டார் என்று படித்தோம். இவைகளோடு மற்றாெரு பெரும் குற்றமும் செய்ய இருக் தார்; ஒரு காள் அந்த நண்பர்களோடு சேர்ந்து கொண்டு விபசார விடுதியொன்றுக்கும் சென்றிருந்தார். அந் நிகழ்ச்சி யைப் பற்றிக் காங்தியடிகள் வாயாலேயே கேட்போம்:

“இவருடைய கட்பின் காரணமாக என் மனைவிக்கும் கான் துரோகம் செய்ய இருந்தேன். ஒரு மயிரிழை அளவில் இதனின்றும் தப்பினேன். இக் கண்பர் ஒரு முறை என்னை விபசார வீடு ஒன்றுக்கு அழைத்துச் சென்றார். அங்கு எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற விளக்கங்களைக் கூறி, என்னே உள்ளே அனுப்பினர். எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டு விட்டன: பணமும் கொடுத்தாகி விட்டது. இறைவன் தன் எல்லேயற்ற கருணேயால் என்னேத் தடுத் தாட் கொண்டான். அந்தப் பாவக் குகையில் நுழைந்ததும் என் பார்வை மங்கிப்போயிற்று. பேசுவதற்கு கா எழ வில்லை. படுக்கையில் அவள் அருகில் உட்கார்க்தேன். ஆனல் ஒரு வார்த்தையும் என்னல் பேச இயலவில்லை. இதல்ை அவள் பொறுமையிழந்து என்னைத் திட்டி வெளியே போகச் சொன்னுள். என் ஆண்மைக்கு இதல்ை இழுக்கு வங்துவிட்டதாக எண்ணினேன். தாங்க முடியாத அவமானத்தினால், பூமியே வெடித்து கம்மை விழுங்கக் கூடாதா என நினைத்தேன். என் வாழ்க்கையில் இம்மாதிரி கிகழ்ச்சிகள் இன்னும் நான்கு எனக்கு கினேவிருக்கின்றன. அகேகமாக ஒவ்வொரு முறையிலும் என்னுடைய முயற்