பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/299

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29&

அப்போது வைசிராயாக இருந்த வெல்லிங்டன் பிரபுவிடம் அநுமதிக் கேட்டார். ஆல்ை வெல்லிங்டன் பிரபு அதற்கு இசையவில்லை. அப்போது டாக்டர் கப்பராயன், ‘ஆங்கிலப் பேரரசின் பிரதிநிதியாக விளங்கும் நீங்கள், காந்தியடிகளை சங்தித்துப் பேசுவதற்குச் சங்கோசப்படவேண்டியதே இல்லை. இச்செயல், அரசியற் தங்திரத்தில் தங்கட்குள்ள குறைபாட்டையே காட்டுகிறது’ என்று வெல்லிங்டன் பிரபுவுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார்.

“ஆங்கிலப் பேரரசு, காங்கிரஸ் கட்சியோடு எந்த விதப் பேச்சுவார்த்தையும் கடத்தும் கிலேயில் இப்போது இல்லை. காந்தியாரை நான் இப்போது சங்தித்தால், அவர் தம்முடைய பேச்சு வன்மையால் என் முடிவை எங்கு மாற்றி விடுவாரோ என்று அஞ்சுகிறேன்’ என்று திருவாளர் சுப்பராயனுக்குப் பதில் எழுதியிருந்தார், வெல்லிங்டன். இதைப்பற்றிச் சுப்பராயன் அவர்கள் காந்தி யடிகளிடம் கூறியபோது, ‘என்னேக் கண்டு பேசுவதற்கு யாரும் அஞ்ச வேண்டியதில்லே. கான் எதையும் கபடமாகப் பேகவதில்லையே உள்ளத்திலுள்ளதை ஒளிவு மறைவின்றி திறந்துதானே பேசுகிறேன்!” என்று கூறினர்.

இவ்வாறு வெல்லிங்டன் பிரபுவே அஞ்சத்தக்க சொல்லாற்றல் பெற்றவரான காங்தியடிகள் ஆரம்பத்தில் மிகவும் கூச்சமுள்ளவராக விளங்கினர். மேடையில் ஏறிப் பேச கடுங்கினர். அவர் இங்கிலாந்தில் படித்துக்கொண் டிருந்தபோது, ஒருநாள் சைவ உணவுப் பிரசாரக் கூட்ட மொன்றில் பேச அழைக்கப்பட்டிருந்தார். அக்கூட்டம் ‘a arrastair -si pu” (The Ethics of Diet) ersr so gra எழுதிய திருவாளர் ஹோவார்டு வில்லியம்ஸ் என்பவரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேல் காடுகளில் சொற் பொழிவுகளை எழுதிப்படிக்கும் வழக்கம் உண்டு. எனவே காந்தியடிகள் தம் சொற்பொழிவை ஒரு தாளில் எழுதிக் கொண்டார். படிப்பதற்காக மேடையின் மீது எழுந்து