பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29.

எது என்று உங்களுக்குத் தெரியும். குற்றத்தை ஒப்புக் கொள்வதன் மூலமாகவே கான் உங்களைக் காப்பாற்ற முயற்சி செய்யக்கூடும்” என்று காந்தியடிகள் கூறினர்

இதைக்கேட்டு ரஸ்டம்ஜி மனங்குன்றிப் போனர். குற்றத்தை ஒப்புக் கொண்டால் சிறைசெல்ல வேண்டி நேருமே என்ற அச்சம் அவர் உள்ளத்தை வாட்டியது. இறுதியில் காங்தியடிகள் கூறும் அறிவுரையின்படி கடப்ப தாக ஒத்துக் கொண்டார். காங்தியடிகள் கூறிய அறிவுரை பின்வருமாறு :

‘இந்த வழக்கு நீதிமன்றத்துக்குப் போகக் கூடா தென்று கான் கருதுகிறேன். உங்கள்மேல் வழக்கு கடத்து வதோ, விட்டுவிடுவதோ, கடற்கங்க அதிகாரியைப் பொறுத் தது. அவர் அட்டர்னி ஜெனரலின் அறிவுரையின்படி கடக்கவேண்டியவராவார். அவ்விருவரையும் கேரில் கண்டு பேச நான் ஒறுப்படுகிறேன். அவர்கள் விதிக்கும் ஒறுப்புக் கட்டணத்தை(Fime)த் தாங்கள் செலுத்த ஒப்புக்கொள்ள வேண்டும். அநேகமாக அவர்கள் இதற்குச் சம்மதிக்கலாம். அப்படிச் சம்மதியாவிடில், தாங்கள் சிறைக்குச் செல்லச் சித்தமாயிருக்க வேண்டும். குற்றம் செய்வது மானக் கேட்டைத் தரக்கூடியதுதான். ஆனல் அதற்காகச் சிறை செல்வது மானக்கேடல்ல என்பது என் கொள்கை. மானக் கேட்டிற்குரிய செயல் ஏற்கனவே செய்தாகி விட்டது. சிறைவாசத்தை அக்குற்றத்திற்குரிய கழுவாயாகக் கருத வேண்டும். ஆனல் இனிமேல் கள்ளக்கடத்தல் செய்வ தில்லை என்று உறுதிகொள்வதே உண்மையான கழுவா யாகும்.”

காந்தியடிகள் கூறிய அறிவுரைகளை ரஸ்டம்ஜி அப்படியே ஏற்றுக் கொண்டார். அடிகளும் கடற்கங்க அதிகாரியையும், அட்டர்னி ஜெனரலேயும் கேரிற் கண்டு உண்மையை எடுத்துக் கூறினர். ரஸ்டம்ஜியின் வழக்கை