பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/307

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

306

காந்தியடிகள் மனித சமயம் (மாணவ தர்மம்), மனு: திேயில் விளக்கப்பட்டிருப்பதாகக் கூறுகிறார். மனுநீதி வருணசிரம தர்மத்தை வற்புறுத்தும் நூல். இவ் வருணக் கொள்கை காங்தியடிகளுக்கு உடன்பாடே. ஆனல் தமிழ்த் தென்றல் திரு. வி. க. இக் கொள்கையால் காந்தியடிக ளோடு மாறுபடுகிறார். காந்தியடிகள் வருணக் கொள்கையை ஒத்துக் கொண்டாலும் மனுநீதியில் கூறப்பட்டுள்ள எல்லாக் கொள்கைகளும் அவருக்கு உடன்பாடல்ல.

30. பிரம்மச்சரியமும் கருத்தடையும்

காந்தியடிகள் மனித சமுதாயத்துக்குத் தொண்டு செய்வதையே தமது வாழ்வின் தலைசிறந்த குறிக்கோளாகக் கருதினர். முழு நேரமும் மக்களுக்குத் தொண்டு செய்ய வேண்டுமானல், குடும்பத்தைப் பெருக்கிக் கொண்டே போவதில் பயனில்லை என்று அவருக்குத் தோன்றியது. இல்வாழ்க்கையில் சிற்றின்பத்தில் ஈடுபடுவது, ஆத்ம சாத னத்துக்குத் தடையாகும் என்ற கருத்து காந்தியடிகள் உள்ளத்தில் சிலகாலம் இடம் பெற்றிருந்தது. அதோடு குடும்பப் பாதுகாப்பிலும், குழந்தைகள் பெற்று வளர்ப் பதிலும் அதிகம் ஈடுபட்டால் மக்கள் குலத்துக்குத் தொண்டு செய்ய நேரும் சக்தர்ப்பங்களைச் சரிவரப் பயன் படுத்திக்கொள்ள முடியாது என்று அவருக்குத் தோன் றியது. எனவே அவர் வாழ்க்கையில் பிரம்மச்சரியத்தை மேற்கொள்ளத் துணிந்தார்.

இதைப்பற்றிக் காந்தியடிகள் சத்திய சோதனையில் பின் கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

“வாழ்நாள் முழுவதும் பிரம்மச்சரியத்தைக் கடைப் பிடிப்பதென்னும் உறுதிப்பாட்டை மேற்கொண்டேன். அது எவ்வளவு பெரிய சிறப்பான செயல் என்பதை கான் அப்போது அறியவில்லை என்று ஒப்புக்கொள்ள வேண்டும்.