பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/308

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

307

அதைக் கடைப்பிடிக்க நான் அநுபவித்த துன்பங்கள் இன்றும் என் மனக்கண்முன் கிற்கக் காண்கிறேன். அதன் முக்கியமும் காளுக்கு நாள் எனக்குப் புலளுகி வருகிறது. பிரம்மச்சரியம் இல்லாத வாழ்க்கை சாரமற்றதாகவும், விலங்கு கிலேயுற்றதாகவும் எனக்குத் தோன்றுகிறது. இயற்கையில் விலங்குக்குப் புலனடக்க மென்பது தெரியாது. மனிதன் புலனடக்கத்தைக் கடைப்பிடிக்கக் கூடிய ஆற்றலேப் பெற்றிருப்பதால்தான் மனிதகுகிருன்.

பிரம்மச்சரியம்: உடல் கட்டுப்பாட்டில் தொடங்கு. கிறது; ஆனல் உடலுடன் முடிவதில்லை. முழு பிரம்மச் சரியம் கெட்ட எண்ணங்களுக்குக் கூட இடம் கொடுக் காது. உண்மைப் பிரம்மச்சாரி, புலன் ஆசையைப் பூர்த்தி செய்வது குறித்துக் கனவிலும் கருதமாட்டான். உடல் பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடிப்பதிலும் எ ன க் கு. எவ்வளவோ துன்பங்கள் ஏற்பட்டன. தற்போது கான் அபாய எல்லேயைத் தாண்டி விட்டேன் என்று சொல்ல. லாம். ஆயினும் உள்ளம் இன்னும் முற்றிலும் வசப்பட்டு விடவில்லை. இப் பெரிய வெற்றியை அடையும் விருப்பம் பெரிதும் கொண்டிருக்கிறேன். அதற்காகப் பெரு முயற்சி செய்து வருகிறேன். ஆனல் எவ்வளவு விழிப்புடனிருங் தாலும், தீய எண்ணங்கள் எங்கிருந்து வந்து எப்படித் தான் முளைக்கின்றன என்பது எனக்கு இன்றும் விளங்காத ஒன்றாகவே இருந்து வருகின்றது. தீய எண்ணங்கள் உள்ளே நுழையா வண்ணம் மனக்கதவைப் பூட்டும் சாவி மனிதனிடம் இருக்கிறதென்பதில் எனக்கு எள்ளளவும் ஐயமில்லை. ஆனல் ஒவ்வொரு மனிதனும் அதைத் தானே தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். மகான்களும், முனிவர் களும் தங்கள் அனுபவங்களே நமக்காகச் சொல்லிவிட்டுச் சென்றுள்ளார்களாயினும், எல்லோருக்கும் பொருங்தக் கூடியதும், தவருது பயனளிப்பதுமான மருந்து எதையும் அவர்கள் குறிப்பிடவில்லை.