பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/309

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

08

தொடக்க உற்சாகத்தில் பிரம்மச்சரியத்தைக் கடைப் பிடிப்பது மிக எளிதாகவே இருந்தது. இதற்காக என் வாழ்வு முறையில் கான் செய்த முதல் மாறுதல் என்ன வெனில், என் மனைவியுடன் ஒரே படுக்கையில் படுப்ப தையோ, அவளுடன் தனிமையை காடுவதையோ விட்டு விட்டதே ஆகும். இவ்வாறு 1900-ஆம் ஆண்டிலிருந்து ஒரளவு நான் கடைப்பிடித்து வங்த பிரம்மச்சரியத்தை 1906-ஆம் ஆண்டில் ஆயுள் விரதமாகக் கைக் கொண் டேன்.”


காங்தியடிகளும் திரு. என். ஆர். மால்கானி என்பவரும் கருத்தடையைப்பற்றி ஒரு உரையாடல் நிகழ்த்தினர். அவ் வுரையாடலில் காங்தியடிகள் கருத்தடையைப் பற்றிய தம் கருத்தைப் பின்வருமாறு வெளியிடுகிறார் :

“கருத்தடை முறையைப் பயன்படுத்துபவர்கள், புணர்ச்சி, வாழ்க்கைக்கு இன்றியமையாத ஒன்று என்று கருதுகிறார்கள். கருத்தடை செய்யாமல் உடலுறவு கொள் வதால் ஏற்படும் பலாபலன் எவ்வளவு கொடுமையானது என்று அவர்கள் கருதுகிறார்களோ, அதை விடக் கருத் தடை முறையைக் கையாண்டு உடலுறவு கொள்வதால் ஏற்படும் பலாபலன் மிகவும் கொடியது என்று நான் எண்ணுகிறேன். ‘கருத்தடை முறை, இன்ப வேட்கை யைத் தீர்த்துக்கொள்ளும் நோக்கத்தோடு கைக்கொள்ளப் படவில்லை. பொருளாதார நெருக்கடியை முன்னிட்டும். பெண்ணின் உடல்நலத்தை முன்னிட்டும், சமுதாய கலனே முன்னிட்டும். மக்களே நல்லமுறையில் வளர்க்க வேண்டும் என்ற நோக்கத்தை முன்னிட்டும் கைக் கொள்ளப்படு கிறது என்று சமாதானம் கூறுகிறார்கள்.

இந்த நோக்கங்களே கருத்தடை யின் 5ோக்கமாக இருந்தால் கருத்தடையே செய்து கொள்ள வேண்டிய அவசியமில்லையே. வறுமையில் வாடுபவன் உடலின் பத்