பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/312

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.11

மிச்சம் வைக்கக்கூடாது. அன்றைய கோட்டா அன்றாேடு தீர்ந்து விடவேண்டும். மிச்சம் வைத்திருந்தால், அச்சக்தி வேலே கேட்கும். இரவு நேரத்தில் அமைதியாக இருக்காது. புணர்ச்சியின் பால் காட்டம் செல்லும். நன்கு வேலை செய்துவிட்டால் நம் சக்தி தீர்ந்து, அசதி ஏற்பட்டு இரவில் உறக்கம் எளிதில் வங்துவிடும். புலனடக்கத்திற்கு இது தக்க மருங்து. கான் தென்னப்பிரிக்காவில் வாழ்ந்தபோது, காற்பது கல் கடப்பதற்குரிய சக்தி இருந்தால் முப்பத் தொன்பது கல் நடந்து தீர்த்து விடுவேன். அங்கு கான் கன்றாகச் சாப்பிட்டேன்; கன்றாக வேலே செய்தேன்’ என்று கூறினர்.

31. உடற்பயிற்சி

“நான் ஏழாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்த போது திருவாளர் தோராப்ஜி என்பவர் தலைமையாசிரிய ராக இருந்தார். அவர் கட்டுப்பாட்டை வலியுறுத்துபவர்; ஒழுங்கு முறைப்படி செயலாற்றுபவர். உடற்பயிற்சி, கிரிக் கெட் ஆட்டம் இரண்டையும் அவர் மேல்வகுப்புக்களில் கட்டாயமாகச் செய்தார். இவை இரண்டையும் நான் வெறுத்தேன். கட்டாயமாக்கப்படுவதற்கு முன்பு கான் உடற்பயிற்சிக்கும் விளையாட்டுக்கும் செல்வதே இல்லை. எனக்கு இயற்கையான கூச்சம் இதற்கு ஒரு காரண மாகும். அது தவறென இப்போது உணர்கிறேன். உடற் பயிற்சிக்கும் கல்விக்கும் சம்பந்தமில்லே என்று அக்காலத் தில் கினைத்தேன். ஆல்ை இன்று மனப்பயிற்சியைப் போலவே உடற்பயிற்சியும் பள்ளிக்கூடத்தில் இடம் பெற வேண்டுமென அறிந்துள்ளேன்.

எனினும் உடற்பயிற்சி இல்லாததால் எனக்கு அதிகத் திமையொன்றும் ஏற்படவில்லை என்பதை இங்கே கூற