பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/320

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



உள்ளத்தை ஓயாமல் ஆட்கொண்டது. வேலே நிறுத்தம் முடியும் வரையில் உண்ணுவிரதம் மேற்கொள்வதாக அறிவித்தார். இதுவே அடிகள் தம் வாழ்வில் மேற். கொண்ட முதல் உண்ணுவிரதம். உடனே வேலை கிறுத்தம் கட்டுப்பாட்டோடு கடந்தது. ஆலை முதலாளிகளின் தலைவ ரான திருவாளர் அம்பாலால் சாராபாயும், அவர் மனைவி யான சாரளா தேவியும் அடிகள்பால் பேரன்பு கொண் டவர்கள். அடிகளின் உண்ணுவிரதம் அவர்களை வாட் டியது. ஆலே முதலாளிகளும் சமரசத்துக்கு இணங்கினர்.

ng to

1921-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17-ஆம் தேதி காலே யில் வேல்ஸ் இளவரசர் இந்தியாவின் வாயில் என்று சொல்லப்படும் பம்பாய்க் கடற்கரை மண்டபத்தில் வந்து தங்கினர். அதிகார வர்க்கத்தார் சிறப்பான வரவேற். பளிக்க ஏற்பாடு செய்திருந்தனர். அந்த ஏற்பாடுகள் குறிப்பிட்ட திட்டத்தின்படி கடை பெற்றன. இந்துக் களும் இசுலாமியர்களும் அவ்வரவேற்பில் கலந்து கொள்ள வில்லே. பார்சிகளும் ஆங்கிலேய பக்தர்களான கிருத்தவர் களும், ஆங்கிலோ இந்தியர்களும் கலந்து கொண்டனர். பம்பாய் பெரிய ககரமாகையால் இவர்களின் தொகை. இலட்சக்கணக்கில் இருக்கும்.

அதே சமயத்தில் பம்பாய் நகரின் மற்றாெரு மூலையில் மகாத்மாவின் பொதுக்கூட்டமொன்று நடந்தது. அப் பொதுக்கூட்டத்திலிருந்து திரும்பியவர்களும், வேல்ஸ். இளவரசரின் வரவேற்பிலிருந்து திரும்பியவர்களும் எதிரெ திரில் சங்தித்தனர். கைகலப்பு ஏற்பட்டது. இளவரசரை வரவேற்றுவிட்டு வந்த பார்சிகளின் தலைகளிலிருந்த வெளி காட்டுக் குல்லாய்களேயும் அவர்கள் உடம்பின் மீதிருக்க வெளிகாட்டுத் துணிகளையும் சிலர் பலவந்தமாக நீக்கித் தீயிலே போட்டார்கள். எதிர்த்தவர்களே அடித்தார்கள்.