பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/324

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

323

தைக் கைவிட்டுவிட முடிவு செய்து விட்டேன்” என்று கூறினர்.


35. காங்கிரஸ்


நியூ டெல்லியில் ஒரு நாள் காலை, காந்தியடிகள் உலாவுவதற்காக வெளியில் சென்றார். அப்போது பண்டித ஜவகர்லால் நேருவும் உடன் சென்றார். நாடு ஆங்கில ஆட்சியிலிருந்து விடுதலை பெற்றதும், காங்கிரஸ்கட்சி தொடர்ந்து இயங்க வேண்டுமா, கூடாதா என்பது பற்றிப் பேச்சு எழுந்தது. அப்போது காங்தியடிகள் கூறியதாவது:

[1]“காங்கிரஸ் கட்சி, நாடு விடுதலை பெற்ற பின்னும் இயங்கவேண்டும். ஆனல் ஒரு நிபந்தனை. காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராக இருக்கும் யாரும் ஊதியம் பெற்றுக் கொண்டு அரசியல் பதவிகளே வகிக்கக் கூடாது; அவ்வாறு பதவி வகிக்க விரும்புவோர் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிவிட வேண்டும், என்ற ஒரு தன்னல மறுப்பு சட்டத்தை இயற்றிக் கொள்ள வேண்டும்.”




  1. *Vide Page 68. Mahatma Gandhi-by Jawaharlal Nehru.