பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49

பேச்சற்ற போதனை வளர்ந்து வளர்ந்து, சத்தியாக்கிரகமாக என்னுள்ளத்தில் மலர்ந்தது. தென்னுப்பிரிக்கா முதலிய இடங்களில் கான் புரிந்த சத்தியாக்கிரகப் போர்களுக்கு ஊற்றாக அமைந்தது, நான் என் மனேவியிடம் பயின்ற அஹிம்சையே.’

காங்தியடிகள் பல சமய நூல்களையும் பயின்றவர். கீதையைத் தம் வழிகாட்டியாகக் கொண்டவர். ஆனல் ஆஹிம்சையின்பால் தமக்குப் பிடிப்பு ஏ.இற்படக்காரணமாக இருந்தது ஏசுநாதர் அருளிய மலைச் சொற்பொழிவே, (Sermons on the Munt) GI.g 3.3 G,j@. அஹிம்சை என்பது பிறருக்குத் துன்பம் செய்யா திருத்தல் மட்டுமன்று தனக்குப் பிறர் துன்பம் செய்யும் போது, அவர் மீது வஞ்சினம் கொள்ளாது, அக்கொடுமை யிலிருந்து அவரைக் காக்கவேண்டி, அவர்பால் அன்பு கொண்டு துன்பம் பொறுத்தலும் அஹிம்சையின்பாற் பட்டது. அஹிம்சையாவது அயராத அன்பு. அதுவே செந்நெறி அதன் வாயிலாகவே மக்களினத்தைக் காத்தல் இயலும். அஹிம்சை தாழ்மையில் கொண்டு போய்விடும். அஹிம்சை கடவுள் சார்புடையது. அவருடைய துணையைப் பெறவேண்டு: ஈனல் தாழ்மையோடும் கசிவோடும் அவர் பால் அணுக வேண்டும். சிங்தும் குருதி நம்முடையதாக இருக்க வேண்டும். பிறரது குருதியைச் சிந்தாமல், பிறர் வாளால் இறக்கத் துணியும் வீரத்தில் அஹிம்சையுண்டு” என்று அடிகள் விளக்கம் கூறுகிறார்,


*

அடிகள் தென்னப்பிரிக்காவில் வாழ்ந்தபோது, முதன் முதலாக அஹிம்சை அவருள்ளத்தில் மலர்ந்தது. காந்தி யடிகள் தென்னுப்பிரிக்கா சென்ற புதிதில் ஒரு முறை பிரிட்டோரியாவுக்குச் செல்லவேண்டி நேரிட்டது. தென் னப்பிரிக்காவில் கறுப்பர்கள் முதல் வகுப்பில் புகை