பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 I

வண்டிப் பிரயாணம் செய்ய அநுமதிக்கப்படுவதில்லை. ஆனல் காங்தியடிகள் ஒரு முதல்வகுப்பு டிக்கெட் வாங்கிக் கொண்டு புகைவண்டியில் ஏறினர். வண்டி கேட்டாவின் தலைநகரமாகிய மேரிட்ஸ்பர்க்கை அடைந்தது. ஒரு வெள்ளேக்காரர் காந்தியடிகள் அமர்ந்திருந்த பெட்டி யில் ஏறினர். கறுப்பு மனிதர் ஒருவர் முதல்வகுப்புப் பெட்டியில் உட்கார்ங்திருந்ததைப் பார்த்ததும் அவருடைய உள்ளம் பெரும் சங்கடத்திற்குள்ளாகிவிட்டது போலும். ஏதோ ஒரு நச்சுப்பூச்சியைப் அருவருப்போடு பார்ப்பது போல் அடிகளே உற்றுப் பார்த்தார். உடனே அவர் வெளியே சென்று இரண்டு இரயில்வே அதிகாரிகளே அழைத்து வந்தார். எல்லோரும் காந்தியாரை உற்றுப் பார்த்துக்கொண்டு கின்றார்கள். கடைசியில் மற்றாெரு அதிகாரி வங்தார். அவர் அடிகளே கோக்கி, ‘கீழே இறங்கு, சாமான் வண்டியில் போய் ஏறிக்கொள்’ என்று கூறினர். “என்னிடம் முதல் வகுப்பு டிக்கட் இருக்கிறது ஐயா” என்று தாழ்மையாகச் சொன்னர் காந்தியடிகள்.

“அக்கறையில்லை. நீ போய்ச் சாமான் வண்டியிலே தான் ஏறிக்கொள்ள வேண்டும். இக்க வண்டியில் உனக்கு இடம் கிடையாது’ என்றார் அவ் வதிகாரி.

‘டர்பனில் இந்த வண்டியில்தான் எனக்கு இடமளிக் கப்பட்டது. இதிலேதான் நான் பயணம் செய்வேன்” என்று உறுதியான குரலில் விடையிறுத்தார் அடிகள்.

அடிகளின் உறுதியான மறுப்புரையைக் கேட்ட வெள்ளேக்கார அதிகாரிக்குச் சினம் பொத்துக்கொண்டு வந்துவிட்டது. கண்கள் சிவங்தன; மீசை துடித்தது. கேவலம் ஒரு கறுப்பன் தன்னே எதிர்த்துப் பேசுவதா? என்ற எண்ணம் அவருள்ளத்தில் பொங்கி எழுந்தது.

“மரியாதையாகச் சொல்லுகிறேன். இவ்வண்டியை விட்டு இறங்குகிருயா? அல்லது போலீஸ்காரனே அழைத்து

ko. 8.