பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



உட்காரச் சொல்லுகிறாய். இக் கொடுமைக்கு நான் உடன் படமாட்டேன். உள்ளே வேண்டுமால்ை எனக்கு இடங் கொடு. உன் விருப்பம் போல் இங்கு அமர்ந்து உல்லாசமாகப் புகைப் பிடி. ஆனல் படியில் மட்டும் உட்கார முடியாது’ என்று உறுதியான குரலில் சொன்னர்.

இவ்வாறு சொல்லிக் கொண்டிருக்கும்போதே அம் முரடன் காங்தியடிகளின் காதைப் பார்த்து ஓங்கி அறைக் தான்; கையைப்பற்றிக் கீழே இழுத்து விட முயன்றாண். அடி களின் மனவுறுதி பெரும் சோதனைக்குள்ளாகியது. வண்டிப் பெட்டியின் பித்தளேக் கம்பிகளே உறுதியாகப் பற்றிக் கொண்டார். மணிக்கட்டே முறிந்து போனலும் பிடித்த பிடியை மட்டும் விடுவதில்லை என்று முடிவுசெய்தார். அக் கொடியன் அடிப்பதை நிறுத்தவில்லை; வாயில் வந்த படியெல்லாம் திட்டினன். அடிக்கும் அம்முரடனே பெருங் தடியன். அடிபடும் மனிதரோ மிகவும் எளிய உருவத்தினர். இக் கொடுஞ் செயலே வண்டியின் உள்ளே இருந்து கண்ட வெள்ளேயர்கள் காங்தியாரின் மேல் இரக்கம் கொண்டனர். ‘ஏன் அப்பா அவரை அடிக்கிறாய்? அவர் சொல்வது நியாயங்தானே, அங்கே இடமில்லாவிட்டால் உள்ளே வங்து உட்காரட்டும்” என்று கூறினர்கள்.

‘அதெல்லாம் முடியாது’ என்றான் அம்முரடன். என்றாலும் சிறிது வெட்கமடைந்து அடிப்பதை நிறுத்திவிட்டான். வண்டியோட்டியைப் படியில் அமர்த்தி விட்டு, வண்டியோட்டியின் இடத்தில் அவன் உட்கார்ந்து கொண்டான். வண்டி மறுபடியும் புறப்பட்டது.

காங்தியடிகளின் இதயம் வேகமாக அடித்துக்கொண் டது. பிரிடோரியாவுக்கு உயிரோடு போய்ச் சேருவோமா என்ற கவலையே உண்டாகி விட்டது. வண்டித் தலைவன் அடிக்கடி அவரைச் சினத்தோடு முறைத்துப் பார்ப்பதும், விரலே ஆட்டிக் கொண்டே ‘இரு இரு ஸ்டாண்டர்டன்