பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

போது காங்தியடிகளுக்குத் தென்னப்பிரிக்காவில் கல்ல செல்வாக்கு இருந்தது. அவர் பெயர் நன்கு விளம்பரமாகி யிருந்தது. அவர் விரும்பியிருந்தால் அக்காவற்காரனுக்குத் தக்க தண்டனை வாங்கிக் கொடுத்திருக்க முடியும். ஆனல் அவர் விரும்பவில்லை. இக் நிகழ்ச்சியைக் குறிப்பிடும்போது: அவர் அஹிம்சையைப்பற்றிச் சிறப்பாகக் கூறிய ஒரு விளக் கத்தை எடுத்துக் காட்டுவது பொருத்தமாக இருக்கும் என்று எண்ணுகிறேன். அது வருமாறு :

“இம்சையிலும் அஹிம்சை விழுமியது. தண்டித்த லினும் மன்னித்தல் ஆண்டகைமை. மன்னிப்பு, வீரனே அணி செய்கிறது. தண்டிக்கும் அதிகாரம் உள்ளபோது மன்னிப்பதே மன்னிப்பதாகும். மன்னிப்பு என்பது முழு வல்லமையைக் கொண்டது.”

 sk

ஜொகன்னஸ்பர்க்கில் ஆசிய இலாகா’ என்ற ஒரு கிறுவனம் இருந்தது. ஆசிய இலாகாவில் அலுவல் புரிக் தவர்கள் வெள்ளேயர்கள். அவர்கள் அளப்பரிய கொடுமை கள் புரிந்து வந்தனர். இந்தியர், சீனர் ஆகிய ஆசியாக் காரர்களைக் கசக்கிப் பிழிந்து கொண்டிருந்தனர். அங் கிறு வனத்தில் இலஞ்சப் பேய் தலைவிரித்தாடியது. திரான்ஸ் வால் மாகாணத்தில் ஏற்கனவே வசித்தவர்களுக்கு, அம் மாகாணத்தில் நுழைய அநுமதிச்சீட்டுக் கிடைப்பதில்லை. உரிமையற்றவர்கள், நூறு பவுன் ஆசிய இலாகாவிற்கு இலஞ்சம் கொடுத்துவிட்டு எளிதில் நுழைந்து விடுவார்கள். இக்கொடுமைகள் பலரால் காங்தியடிகளிடம் முறையிடப் பட்டன.

காங்தியடிகள் ஆசிய இலாகாவின் இலஞ்சப் பேயை ஒழிப்பதற்காக முயற்சிகள் எடுத்துக் கொண்டார். தக்க சாட்சியங்களைத் தேடிச் சேர்த்தார். ஜொகன்னஸ்பர்க் போலீஸ் அதிகாரியிடம் முறையிட்டார். அவ்வதிகாரி