பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



காந்தியடிகள் தென்னுப்பிரிக்காவில் வாழ்ந்த போது, திரான்ஸ்வால் மாகாண அரசாங்கத்தார் இந்தியமக்களின் குடி உரிமையைப் பறிக்கும் வகையில் ஒரு கொடிய சட்டம் கொண்டு வந்தனர். அச் சட்டத்தைக் காங்தியடிகள் “கருப்புச் சட்டம்’ என்று குறிப்பிட்டார். அச் சட்டத்தை ஒழிப்பதற்குக் காங்தியடிகள் பெரிய போராட்டம் ஒன்றைத் துவக்கினர் அமைதியான முறையில் அச் சட்டத்தை மீறிப் பல்லாயிரக் கணக்கான மக்கள் சிறை சென்றனர். பலர் சிறையில் வாடி உயிர் துறந்தனர். அவர்களில் குறிப் பிடத் தக்கவர் வள்ளியம்மை என்ற வீசத் தமிழ்ப் .ெ ண். இறுதியாகக் கருப்புச் சட்டம் நீக்கப்பட்டது. இந்தியருக் குப் பாதகமாக இருந்த பல சட்டங்களும் அகற்றப்பட்டன. இத்தனே கொடுமைகளுக்கும் காரணமாக இருந்தவர் திரான்ஸ்வால் மாகாணத்தின் தலைவராக இருந்த தளபதி ஸ்மட்ஸ் துரை. ஆனல் காங்தியடிகள் அவரை வெறுக்க வில்லே, தம்முடைய ஆசிரமத்தில் தம் கையால் செய்த, ஓரிணை மூடு செருப்பு(Shoes)க்களை தளபதி ஸ்மட்ஸ் துரைக்குப் பரிசாக வழங்கினர். பகைவனிடத்திலும் அன்பு காட்டினர் அடிகள்.


‘அஹிம்சையாவது, முற்றும் மாசின்றி இருத்தல். அஹிம்சையின் முழுமை எது என்று கேட்டால், நஞ்சுள்ள பூச்சி, விலங்குகளிடத்தும் பகைமை கொள்ளாமை’ என்று அடிகள் கூறுகிறார், கச்சுப் பூச்சிகளிடம் எவ்வாறு அன்பு காட்ட முடியும் இது விந்தையாக இருக்கிறதே என்று எண்ணலாம். இக் கொள்கையைச் செயலில் கடைப்பிடித் தல் சாலுமா என்று சிலர் ஐயுறலாம். அடிகள் வாய்ச் சொல் வீரரல்லர், செயல் வீரர், தம் வாழ்வில் செய்து காண்பித்தார். இங் நிகழ்ச்சி 1917-ஆம் ஆண்டு நிகழ்ந்தது. ஒருநாள் மாலத் தொழுகையை முடித்துக் கொண்டு காந்தி யடிகள் ஆசிரமத்தில் அமர்ந்திருந்தார், முதுகுக்குத் தாங்க