பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



லாக ஒரு தலையணையை வைத்துக்கொண்டு கண்பர்களிடம் சுவையாக உரையாடல் நிகழ்த்திக் கொண்டிருந்தார். அப் போது குளிர் அதிகமாக இருந்தது. கஸ்தூரிபாய் வெண் மையான ஒரு கதர்ப் போர்வையைக் கொண்டுவந்து அடிகளின் மேல் போர்த்தார். அப்போது ராவ்ஜிபாய் படேல் அருகில் அமர்ந்திருந்தார். அவருடைய கவனம் காங்தியடிகள் போர்த்திருத்த போர்வையின் மேல் சென்றது. வெண்மையான போர்வையின் விளிம்பில் கருநிறமான ஒரு பொருள் கேளிவது தெரிந்தது. உற்றுப் பார்த்ததும். அது ஒரு மீண்ட கரும்பாம்பு என்பதை ராவ்ஜி அறிந்தார். அப் பாம்பு அடிகளின் முதுகின் மேல் மெதுவாக ஏறித் தோள் பட்டையை அடைந்தது. அதற்குமேல் செல்லப் பற்றுக் கோடு எதுவும் இல்லாத காரணத்தால், அப்பக்கமும் இப் பக்கமும் பார்த்தது.

ராவ்ஜிபாய் தம்மைக் கவனிக்காமல் தம் தோள் களேயே உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பதை அடிகள் கவனித்தார். அதுவுமல்லாமல் தம் தோள்மீது ஏதோ ஒரு பொருள் ஊர்வதாகவும் அறிந்தார்.

“ராவ்ஜிபாய்! என்ன அப்படிப் பார்க்கிறீர்கள்?” என்று கேட்டார் அடிகள். ராவ்ஜிபாய் கிதானத்தை இழந்து விட வில்லை. தாம் உரக்கச் சொன்னுல், உள்ளே யிருக்கும் கஸ்துாரிபாய் முதலியோரின் செவிகளில் விழலாம். உடனே அச்சத்தால் அவர்கள் ஏதேனும் குழப்பம் விளே வித்து விட்டால், பாம்பு மருண்டு காங்கியடிகளைக் கடித் தாலும் கடித்து விடலாமல்லவா? அதனுல் ராவ்ஜிபாய் அடிகளே கோக்கி, ‘ஒன்றுமில்லே பாபு ஒரு பாம்பு தங்கள் தோள்மீது இருக்கிறது. சிறிது நேரம் அசையாமல் இருங்கள்” என்று மெதுவாகச் சொன்னுர்.

“சரி! நான் அமைதியாக இருக்கிறேன். நீங்கள் இப் போது என்ன செய்யப் போகிறீர்கள்?’ என்று கேட்டார் அடிகள்.