பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

பாம்பை, யாரும் அடிக்கக்கூடாது; அச்சமின்றி அதைச் செல்லவிட வேண்டும்” என்று கூறினர்.

  காந்தியடிகளின் அஹிம்சை விலங்குகளிடம் மட்டு மன்றி தாவரங்களிடத்தும் அன்பு காட்ட வேண்டும் என்பதாகும். ஒருநாள் மீராபாயின் வேண்டுகோளுக் கிணங்கி, இராப்பொழுதில் இளைஞர் சிலர், பசுங்தழை சிறிது பறித்துவருவதற்குப் பதிலாகத் தழைகளைக்கொத்து கொத்தாகப் பறித்து வந்தார். அவை காங்தியடிகளுக்குக் காட்டப்பட்டன. அப்பொழுது காங்தியடிகளால் சில மணிமொழிகள் அருளப்பட்டன. அவை பின்வருமாறு:

‘மரங்களும் நம்மைப்போல் உயருடையனவே, அவை கம்மைப்போலவே வளர்கின்றன ; முகர்கின்றன; உண்கின் றன; பருகுகின்றன; உறங்குகின்றன. அவை இரவில் ஒய்வு பெற்று உறங்கும்போது, அவற்றின் தழைகளை பறித்தல் இழிதகைமை என்மீது தாவவும் என் கழுத்தில் மாலேயாக அணிவிக்கவும் மென்மையான மலர்களைப் பறிப்பது எனக்குத் துன்பமூட்டுகிறது. அஃறிணை உயிர்களிடத்தும் நாம் அன்புகாட்டுதல் வேண்டும்.”

1930-ஆம் ஆண்டில் காங்தியடிகள் எரவாடா சிறை யில் இருந்தார். அவரோடு காகா கலோல்காரும் இருந்தார். காகா நூல் நூற்பதற்காகப் பஞ்சை வில்லாலடித்துத் துய்மைப்படுத்திப் பட்டையிடுவது வழக்கம். மழைகாலம் வங்துவிட்டது. பஞ்சடிக்கும் வில்லில் பொருத்தப்பட்டிருந்த காண் சுருங்கிப் பிசுபிசுத்தது. அதை மழமழப்பாக்குவதற் காக சிறைச்சாலையின் உள்ளேயிருந்த வேம்பின் இலேகளேப் பறித்துத் தேய்ப்பது வழக்கம். காகா காள்தோறும் ஒரு கொம்பை ஒடித்து, அதிலுள்ள இலகளேப் பறிப்பது வழக்கம். இதை அடிகள் கவனித்தார்.

ஒருநாள் காலேல்கரைப் பார்த்து, ‘காகா! உம்முடைய செயல் அஹிம்சைக்குப் புறம்பானது. பிறருக்கு இவ்