பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77

எப்படித் தலைப்பாகை அணிய அதுமதிக்கப்பட்டார்?” என்ற ஐயப்பாடு காங்தியாரின் உள்ளத்தைக் குடைங்தது அப்துல்லாவை அணுகித் தம் ஐயப்பாட்டை வெளிப்படுத் தினர். தாதா அப்துல்ல. பின்வருமாறு கூறி அவர் ஐயத் தைப் போக்கினர்:

“இசுலாமியர்கள் தங்களே இங்கு அராபியர்கள் என்று கூறிக்கொள்கின்றனர். பார்சிகள் தங்களேப் பாரசீக காட்டவர் என்று கூறிக் கொள்கின்றனர். அராபிய நாடும் பாரசீக நாடும் சுதந்தர நாடுகள். எனவே சுதந்தர நாட்டு மக்களான அவர்கள் தலைப்பாகை வைத்துக்கொள்ள அநுமதிக்கப்படுகிறார்கள். ஆனல் இந்துக்கள் தங்களே இந்தியர் என்று தானே கூறிக்கொள்ள வேண்டும்? அடிமை இந்தியருக்குத் தலைப்பாகை ஒரு கேடா? என்று இவ் வெள்ளேக்காரர்கள் எண்ணுகின்றனர்.”

அப்துல்லா கூறிய இவ் விளக்கத்தைக் கேட்டவுடன் அடிகளின் உள்ளம் மிகவும் வருந்தியது, தென்னுப்பிரிக்க இந்தியரின் கிலேயை எண்ணி உள்ளம் புண்ணுஞர். நீதிபதி தமக்கு இட்ட கட்டளை நாகரிகத்திற்குப் புறம்பான, முறை யற்ற செயல் என்று கண்டித்துச் செய்தித்தாள்களில் அறிக்கை வெளியிட்டார். காந்தியடிகளின் அறிக்கையைப் படித்த வெள்ளேயர்கள் கையாடினர். ‘வேண்டாத விருந்தாளி’ என்ற தலைப்பில் இவரைப்பற்றி எழுதிக் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆட்படுத்தினர். ஆனால் அடிகள் அவற்றை யெல்லாம் பொருட்படுத்தவில்லை. தென்னப் பிரிக்கா சென்ற சில நாட்களில் காந்தியடிகளின் பெயர் விளம்பரமாகிவிட்டது. நேர்மைக்குப் புறம்பான செயல் எங்கு நிகழ்ந்தாலும், காங்தியடிகள் அதைக் கண்டிக்கத் தயங்கியதே இல்லே.

3. 

காங்தியடிகள் இரண்டாம் முறையாகத் தென்னப் பிரிக்கா சென்றபோது அவருடைய வாழ்க்கையில் குறிப்