பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78.

பிடத்தக்க ஒரு நிகழ்ச்சி நடந்தது. அங்கிகழ்ச்சி காந்தியடி களின் பெருமையை இமயத்தின் உச்சிக்கே கொண்டு சேர்த்து விட்டது என்று கூறலாம். மகாத்மாவின் இலக் கணத்தை அங்கிகழ்ச்சி வரையறுத்துக் காட்டிவிட்டது. என்று மார்தட்டிக் கூறலாம். மேலும் அஹிம்சை கோழை யின் ஆயுதமல்ல; அஞ்சாமையே அஹிம்சையின் கருவறை என்ற உண்மையையும் அங்கிகழ்ச்சி உலகிற்கு உணர்த் தியது.

காந்தியடிகள் முதன்முறை தென்னுப்பிரிக்காவிலிருந்து இக்தியா திரும்பியவுடன், தென்னுப்பிரிக்க இந்தியருக்கு வெள்ளேயர்களால் இழைக்கப்படும் அநீதியை எடுத்துக் கூறினர். பம்பாயின் சிங்கமான பிரோசிஷா மேத்தா வின் தலைமையில், பம்பாய் ஜஹாங்கீர் மண்டபத்தில் தென் னப்பிரிக்க இந்தியரின் இரங்கத்தக்க நிலையை எடுத்துக் கூறிச் சொற்பொழிவாற்றினர். பூவிைல் புகழ்பெற்ற சரித்திரப் பேராசிரியரான பங்தார்க்களின் தலைமையில் ஒரு சொற்பொழிவாற்றினர். பல பத்திரிகைகளுக்குக் கட்டுரை எழுதி வெளியிட்டார். பிறகு தமிழகத்துக்குச் சென்றார். தென்னுப்பிரிக்க இந்தியரில் பெரும்பாலோர் தமிழரா யிற்றே! அதனுல் அடிகளுக்குத் தமிழகத்தில் நல்ல வர வேற்பிருந்தது. தென்னப்பிரிக்க இந்தியரின் நிலையை விளக்கி ஒரு சிறு நூலே வெளியிட்டார். அதற்குப் “பச்சைப் பிரசுரம்’ என்று பெயர். அவ்வெளியீடு கல்ல முறையில் விற்பனேயாயிற்று.

காக்தியடிகள் தென்னுப்பிரிக்க வெள்ளையரின் கொடு மைகளே, இந்தியாவி லிருந்துகொண்டு உலகறியும்படி அம்பலப்படுத்தி விட்டதால் தென்னுப்பிரிக்க வெள்ளேக் காரருக்கு மிகவும் எரிச்சலேற்பட்டது. தங்களைப் பற்றிப் பொய்ப்பிரசாரம் செய்வதாகக் காந்தியடிகளின் பால் அடங்காத சினம் கொண்டனர்,