பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

சேம்பர்லின் என்பவர். காந்தியடிகள் வெள்ளேயர்களால் தாக்கப்பட்ட செய்தியைச் செய்தித் தாள்களின் மூலம் அறிந்தார். ‘காந்தியாரைத் தாக்கியவர்களைக் கைது செய்து அவர்கள் மீது வழக்கு கடத்தவும் ‘ என்று கேடால் அரசாங்கத்துக்கு ஒரு கம்பிச் செய்தி விடுத்தார்.

உடனே கேடாலின் அரசாங்க வழக்கறிஞரான திரு வாளர் எஸ்கோம்பு காங்தியடிகளே அழைத்து, “கப்பலி லி தங்து இரவு கேரத்தில் இறங்கும்படி நான் செய்தியனுப் பினேன். அதைக் கேட்டு நடந்திருந்தால் இந்தத் துன்பங் கள் நேர்ந்திரா. ஆனல் திருவாளர் இலாப்டனுடைய யோசனையின்படி கடந்து, அதல்ை நேரும் துன்பங்களே ஏற்க உறுதி கொண்டிருந்ததை நான் பாராட்டுகிறேன். அம்மாதிரி கடந்துகொள்ள உங்களுக்கு உரிமையுண்டு என் பதையும் ஒத்துக் கொள்கிறேன். இப்போது உங்கள் விருப்பமென்ன? உங்களைத் தாக்கியவர்களைக் குறித்து அடையாளம் சொல்ல முடியுமானுல் அவர்களைக் கைது செய்து வழக்கு நடத்தத் தயாராக இருக்கிறேன். வழக்கு கடத்த வேண்டுமென்று திருவாளர் சேம்பர்லினிடமிருந்து செய்தி வந்திருக்கிறது” என்று கூறினர்.

இதற்குக் காந்தியடிகள் பின்வருமாறு விடையளித் தார் :

“யார் மீதும் வழக்கு கடத்த எனக்கு விருப்பமில்லே, இரண்டொருவரை நான் அடையாளம் கண்டு பிடித்துச் சொல்ல முடியும். அதல்ை யாது பயன்? அவர்களுக்குத் தண்டனை வாங்கிக் கொடுப்பதில் எனக்குத் திருப்தி கிடை யாது. என்னேத் தாக்கியவர்கள் மீது எனக்குக் கொஞ்சமும் சினம் இல்லை; அவர்கள் மீது கான் குற்றம் சொல்லவும் மாட்டேன். குற்றம் உங்களைப் போன்ற சமூகத் தலைவர் களுடையது. நீங்கள் மக்களுக்குச் சரியான வழிகாட்டி யிருக்க வேண்டும். அப்படிச் செய்ய நீங்கள் தவறி விட்டீர் கள். இந்தியாவில் கான் இருந்தபோது, கேடால் வெள்ளைக்