பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9.2

முடைய பத்து விரல்களேயும் கறுப்பு மையில் தோய்த்து ரேகை அடையாளமும் கொடுக்க வேண்டும். இப்படிப் பதிவு செய்து கொள்ளாதவர்களுக்குத் திரான்ஸ்வால் மாநிலத்தில் வாழும் உரிமை கிடையாது. குழந்தைகளுக் காகப் பெற்றாேர்கள் விண்ணப்பம் போட வேண்டும். பெண்களும் குழங்தைகளும் கூட அலுவலகத்துக்குச் சென்று பத்து விரல்களின் அடையாளத்தையும் பதிவு செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்து பெற்ற அநுமதிச் சீட்டை, இந்தியர் ஒவ்வொருவரும் எப்போதும் கையில் கொண்டு போகவேண்டும். எங்தப் போலீஸ்காரன் எப்போது கேட்டாலும் காட்ட வேண்டும். காட்டா விட்டால் அபராதமோ, சிறைவாசமோ விதிக்கப்படும். இத்தகைய கொடிய மசோதா இந்தியரின் தன்மானத்திற் குப் பெரிய சோதனை. இம்மசோதா 1906-ல் திரான்ஸ் வால் அரசாங்க கெஜட்டில் வெளியிடப்பட்டது. இதைப் படித்த காந்தியடிகளின் குருதி கொதித்தது.

இம் மசோதா கிறைவேருமல் இருப்பதற்கான பெரு முயற்சியில் காந்தியடிகள் ஈடுபட்டார். இந்தியர்களே யெல்லாம் ஒன்றுகூட்டி, இதன் கொடுமையை விளக் கினர். இம்மசோதாவை எதிர்த்து அமைதியான முறையில் ஒரு சாத்துவிகப் போராட்டம் கடத்தத் தீர்மானித்தார். இக்கொடிய சட்டத்தைக் ‘கறுப்புச் சட்டம்’ என்றார்.

1907-ம் ஆண்டு ஜூலே மாதம் முதல் காள் வங்தது. அன்று திரான்ஸ்வால் எங்கும் இந்தியர்கள் பெயரைப் பதிவு செய்து கொண்டு, அநுமதிச் சீட்டுப் பெறும் அலுவ லகங்கள் திறக்கப்பட்டன. இவ்வலுவலகங்களின் முன் தொண்டர்கள் கின்றுகொண்டு அமைதியாக மறியல் செய்தனர். இவர்களுடைய மறியல் கல்ல முறையில் வெற்றி பெற்றது. இதல்ை சினங்கொண்ட திரான்ஸ்வால் அரசாங்கம் காங்தியடிகள் உட்பட ஆயிரக்கணக்கான இங்தியர்களேச் சிறை செய்தது. சிறைக்கு வெளியில் கிளர்ச்சி