பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94

எல்லேயில் வாழும் கூட்டத்தார். முரட்டுத்தனத்துக்கும் வெறிச் செயலுக்கும் பேர்போனவர்கள். கொல்லுவதும் கொலேயுண்பதும் அவர்களுக்கு நிலாச் சோறு. கொட்டும் குருதி அவர்களுக்குத் தண்ணிர். மிகுந்த முன் கோபம் உடையவர்கள். அடிக்கடி தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்வார்கள். சண்டையென்றால் அநேகமாகக் கொலே யில்தான் முடியும். தென்னப்பிரிக்காவில் வாழ்ந்த பட்டா னியர்களுள் மீர் ஆலம்’ என்பவன் ஒருவன். காந்தியார் பேசிக் கொண்டிருந்த போது அவன் நடுவில் எழுங்தான்.

“நீங்கள் பேசுவதை நாங்கள் ஏற்றுக்கொள்ளத் தயாரா யில்லை. நீங்கள் தளபதி ஸ்மட்சு துரையிடம் பதினையாயிரம் பவுன் கையூட்டுப் பெற்றுக் கொண்டு இங்திய சமூகத்தைக் காட்டிக் கொடுத்து விட்டதாகக் கேள்விப்படுகிருேம். இதைப்பற்றி எங்களுக்குக் கவலை யில்லே. ஆனல் காங்கள் ஒருநாளும் விரல் அடையாளம் கொடுக்கப் போவதில்லை. யார் ஒருவன் முதன் முதலில் விரல் அடையாளம் கொடுக்கப் போகிருனே, அவனே நான் கொன்று போட்டு விடப் போகிறேன். அல்லாவின் மீது ஆணையாகச் சொல்கிறேன்! ஜாக்கிரதை’ எ ன் று சொன்னன்.

மீர் ஆலம் இவ்வாறு சொன்னவுடன் கூட்டத்தில் இருந்தவர்கள் எல்லோரும் கலங்கிப்போனார்கள். ஆணுல் காங்தியடிகள் மட்டும் எவ்விதக் கலக்கமும் கொள்ளவில்லை. ‘உலகத்தில் பிறந்தவர்கள் எல்லோருக்கும் மரணம் உண்டு. நோயினலோ முதுமையினலோ இறப்பதைக் காட்டிலும் சகோதரன் ஒருவனுடைய கையில்ை கொல்லப் பட்டு இறப்பது மேலானது. அதற்காக வருத்தப்பட வேண்டியதில்லை. அப்படி என்னேக் கொல்லவரும் சகோதர னிடத்தில் கோபமோ வெறுப்போ இல்லாமல் நான் இறங்கேளுல்ை, அதுவே நான் பெறக்கூடிய பெரும் பேரு கும். அதுதான் என் ஆத்மாவுக்கு கற்கதியளிக்கும்.