பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 6

“அது எப்படி? கூடவே கூடாது! அவர்களே உடனே விடுதலை செய்ய வேண்டும்’ என்றார் மகாத்மா. அவர்களே விடுதலை செய்யும்படியும், அவர்கள் மேல் எங்தவிதமான வழக்கும் போடக்கூடாதென்றும் அரசாங்கத் தலைமை வழக்கறிஞருக்குக் காந்தியடிகள் ஒரு கம்பிச் செய்தி விடுத்தார். உடல்கிலே சிறிது குணமடைந்ததும் தாமே முதலில் சென்று கைரேகைகளைப் பதிவுசெய்துகொண்டார். பிறகு திரான்ஸ்வால் இந்தியர் எல்லோரும் பதிவு செய்து கொண்டனர், ஆனால் ஸ்மட்சு துரை தம் பேச்சைக் காப்பாற்றவில்லை. கறுப்புச் சட்டத்தை நீக்க முடியாது என்று கூறிவிட்டார்.

காந்தியடிகள் மீண்டும் போராட்டத்தைத் துவக் கினர். 1908 ஆம் ஆண்டு ஆகஸ்டு திங்கள் 16 ஆம் நாள் ஜோகன்னஸ்பர்க் ஹமீதியா மசூதியைச் சேர்ந்த திறந்த வெளியில் மாபெரும் பொதுக்கூட்டம் கூடியது. அரசாங் கத்தாரிடமிருந்து பெற்ற எல்லாப் பதிவுச் சீட்டுகளேயும் எரியும் தீயில் போட்டுப் பொசுக்குவதென்று முடிவாயிற்று. தி கொழுந்துவிட்டு எரிந்தது, அப்போது மீர் ஆலம் கூட் டத்திலிருந்து எழுந்து மேடைமீதமர்ந்திருந்த காங்தியடி களே நோக்கி வந்தான். கூட்டத்திலிருந்தவர்கள் என்ன கடக்குமோ என்று குலேநடுக்கம் கொண்டனர்.

‘கான் தங்களே அடித்தது பெருங்குற்றம். அதற்காக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். என் பேரில் கோபம் வேண்டாம்” என்று சொல்லிவிட்டுத் தன் பதிவுச்சீட்டை எடுத்துத் தீயில் வீசினன். கூட்டத்தில் காது செவிடுபடும் படி ஆரவாரம் எழுந்தது.

காங்தியடிகள் மீர் ஆலத்தின் கையைப் பிடித்துக் குலுக்கி, ‘அப்பனே! உன்பேரில் எப்பொழுதும் எனக்குச் சினம் கிடையாது’ என்று கூறித் தம் பொக்கைவாயால் புன்சிரிப்புக் காட்டினர்.