பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ix இதில் அகிலன் எழுதியுள்ள சகோதரர் அன்ருே ?’ என்ற பாரதியின் வாக்கைத் தலைப்பாகக் கொண்ட சிறுகதை இந்த எச்சரிக்கையை விடுக் கிறது. வடக்கு தெற்கு என்று விளையாட்டு மைதானத் தில் மோதிக் கொண்ட பஞ்சாபி இளைஞனும்-தமிழ் இளைஞனும் சீனருக்கு எதிரான போர்க் களத்தில் தோளோடு தோள் நின்று போரி டு கி ரு ர் கள். தமிழனின் உயிரைக் காக்கத் தன்னுயிரை விடுகிருன் பஞ்சாபி. பஞ்சாபியின் தியாகத்தால் உயிர் பிழைத்த தமிழனின் சொற்களைக் கவனிப்பேர்ம் : ' ஆயிரம் வேற்றுமைகளுடைய நம் தேசத் தில் அடிப்படையான ஒரு பண்பாடு வலிமையாக இழையோடுகிறது. எனக்கும் உனக்கும் இமயமலை சொந்தம். அதனுல்தான் நாம் அதைக் காக்க உயிர் கொடுக்க வந்திருக்கிருேம். அதுபோலவே கன்னியாகுரியும் ராமேச்வரமும் ராஜ்பகதூருக்கு சொந்தம் . . . அவனும், நானும், நாமும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள்...நெடுங்கால உறவு இது !' நாம் இந்தியர் என்பதையும், இந்த உறவுக்குக் குறுக்கே சாதியோ, சமயமோ இனமோ தலைகாட்டக் கூடாது என்பதையும் தி. சர். ராஜூவும் அவருடைய மேஜர் ரஹ்மான் பேசுகிறேன்' என்ற கதையில் ஆணித்தரமாக வலியுறுத்தியுள்ளார். பொதுவாக, இப்படி ஒரு கதைத் தொகுப்பைத் தமிழில் கொண்டு வந்தவர்கள். பாராட்டப்பட வேண்டியவர்கள். இது ஒரு முன்முயற்சியாக இந்தத் துறையில் இருக்குமென நம்புகிறேன். இந்தத் தொகுப்பிலிருந்து பத்துப்iன்னிரண்டு கதைகளைத் தேர்ந்தெடுத்துத் தமிழ் நாட்டுப் பள்ளிகளில் விருப்பப்பாடமாக வைக்க வேண்டும். பள்ளி இறுதி மாணவர்களுடைய மனத்தில் காந்தியமும், தேசிய