பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா. கி. ரங்கராஜன் 83 மேட்டுரில் இன்னொரு புதுத் தொழிற்சாலைக்கு ஏற்பாடு பண்ணிக் கொண்டிருக்கிரு.ர். அது முடியட்டும் என்று பார்க்கி ருர், ' என்பாள் சாந்தி. அதெல்லாம் இல்லை. கல்யாணமாகிவிட்டால், உன் நகப் பாலிஷ-க்காகத் தன் ஆஸ்தியில் பாதி கரைந்து விடுமோ என்று அவனுக்குப் பயம்,' என்பார் பெரியப்பா. சாந்தி, மகிழம்பூ கொட்டின மாதிரி சிரித்து மழுப்புவாளே தவிர, அத்தனை அலங்காரப் பிரியையாக இருப்பது குறித்து வெட்கப்படமாட்டாள். தோழியர் வட்டாரத்தில்-அதுவும் காந்தி நகர் யங் லேடீஸ் ரிக்ரியேஷன் கிளப் எல்லைக்குள்நாகரிகம் பற்றித் தன் காலடியில் அமர்ந்து பாடம் கேட்கும் தகுதிகூட யாருக்குமில்லை என்பதில் அவளுக்கு அலாதிப் பெருமைதான். ஐந்து விரல்களையும் கண்ணெதிரே தூக்கி நிறுத்திக்கொண்டு அழகு பார்த்தாள் சாந்தி. சொர்ண விக்கிரகம் போன்ற தலைச் சன் பிள்ளையைத் தூக்கிப் பார்த்து ஆனந்தப்படும் தாயின் பெருமிதம் அவள் நெஞ்சில் விம்மிதம் தந்தது......டிரெஸ்ஸிங் டேபிளின் கீழிருந்த காஷ்மீர ஸ்லிப்பர்களை வலது கால் பெரு விரலினல் நாசுக்காக வெளியே இழுத்து, மாட்டிக்கொண்டாள். வேலைக்காரி அவற்றைச் சரியாகத் துடைத்து வைக்கவில்லை என்ற கோபம் சிறிது முகத்தில் வெளிப்பட, படிப் படியாக எண் னிக் கீழே இறங்கியபோது, கோபத்துக்குக் காரணமான மீனம் பாள், தன் செருகுக் கொண்டையைச் சொறிந்த வண்ணம், நாளைக்கு...நானும் என் புருசனும் வெளியூருக்குப் போருேம் அம்மா,’’ என்று ஆரம்பித்தாள். ஏன்? மெட்ருஸ் ஸிடியிலே இல்லாத புதுமை வெளியூரிலே என்னடியம்மா வந்திருக்கிறது?’ என்று சாந்தி வெடித்தாள். அவரு...என் புருசன்...கிராமத்திலே ஏதோ சங்கம் ஆரம் பிச்சு நடத்திட்டிருந்தவருங்க, அம்மா நாளைக்கு அங்கே என்னவோ விழாவாம்.” * சரிதான்! பெரிய சோஷல் ஒர்க்கர் நீங்களெல்லாம்! விழாவு மாச்சு, கிழாவுமாச்சு வீட்டிலேயே கிட என்று கட்டளை போட்டுவிட்டு வெளியே வந்தாள், என்ன இது ? பிளிமத்தைக் காளுேமே சங்கர் இன்னும் வர வில்லையா? -