பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 சாந்தி பிறந்த நாள் மணிக்கட்டைத் திருப்பி, தங்கச் செயினில் கோத்த, மோதிர அளவு கடியாரத்தை நோக்கிள்ை சாந்தி. மணி ஆறே கால். வார்த்தை தவறிவிட்டார் ஹகும் கேட்டால், அகமதா பாத்திலிருந்து ஒரு ஆசாமி வந்து அமுக்கிவிட்டான் என்று அளக்கப் போகிருர் ! வெறுப்புடன் சாந்தி உள்ளே திரும்பி வந்த சமயம், தோட் டத்தில் நீந்திக் கொண்டு வந்த கார், ஜம்மென்ற குலுக்கலுடன் அவளெதிரில் நின்றது. "லாரி சாந்தி ஏறிக்கொள்,' என்ற படி காரின் கதவைத் திறந்துவிட்டான் சங்கர். உதட்டை ஒரு சுழிப்புச் சுழித்துத் தனது சினத்தை வெளிப் படுத்திய பின்னர் சாந்தி ஏறியமர்ந்து கொண்டு, சற்று அதிகப் படி ஓசையுடனேயே கதவைப் படக்கென்று சாத்திக் கொண்டாள். சங்கரின் சுறுசுறுப்பான முகத்தில் அலைச்சலின் களைப்புத் தெரிந்ததை அவள் கவனித்தாள். சிறிது கோபம் தணிந்த வளாக, "எங்கெல்லாமோ சுற்றிவிட்டு வருகிறீர்கள்!' என்று குற்றம் சாட்டுகிற சாக்கில் விஷயத்தைத் தெரிந்து கொள்ள முயன்ருள். ஆமாம்...நாளைக்குச் சர்வோதயா தினமில்லையா?” அதாவது...ஓ ! காந்திஜி இறந்த தினத்தைச் சொல்கி lர்களா ? . ' ஆமாம். எங்கள் அசோசியேஷனில் பிரார்த்தனை, பொதுக்கூட்டம், அது இது என்று ஏற்பாடு பண்ணியிருக்கிருர் கள். முக்கியமான சில பொறுப்புக்கள் எனக்கு...' " அடி சக்கை !' ஆச்சரியத்துடன் முழுதாக அவன் பக்கம் திரும்பினுள் சாந்தி. எத்தனை நாளாக இந்தக் கூத்தெல்லாம்!' காரின் வேகத்தோடு தன் குரலையும் நிதானப்படுத்திக் கொண்டான் சங்கர். இருக்க வேண்டியதுதானே சாந்தி, இது வும் கொஞ்சம் கொஞ்சம் வருஷம் முன்னூற்றறுபத்தைந்து நாளும் பணம், சம்பாத்தியம், பிஸினஸ். ஆட்டைத் துரக்கி மாட்டில் போடுவது, ஆளேக் கவிழ்ப்பது-இதிலேயேதான் போகிறது, அதை முழுக்க முழுக்க விடுவதற்கில்லை. பிழைப்பு வாழ்க்கையை அப்படி அமைத்துக்கொண்டாகிவிட்டது. ஆளுல் நடுவே இரண்டொருநாள் இப்படித்தான் வாழ்க்கையைத் திருப்