பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா கி. ரங்கராஜன் 35 பிக் கொள்வோமே? அப்போது கிடைக்கிற மன அமைதியில் மற்ற நாட்களை ஒட்டலாம்! " ஒகோ ! வேதாந்தம் பலமாயிருக்கிறதே !” என்று சாந்தி சிரித்தாள். " வேதாந்தமாவது, தத்துவமாவது இதோ பார், என்று தன் பக்கத்திலிருந்த சிறிய பார்சலைக் காட்டினன் சங்கர். “கதர் டிரஸ் எதுவுமே கிடையாது என்று நினைவு வந்தது. ரெடி மேடில் வாங்கி வந்தேன். உன் உடம்புக்கு ஏற்றதாக எவ்வளவு அருமையான புடவை...' போதுமே கண்ணராவி !' என்று சாந்தி முகத்தைச் சுளிக்கவே சங்கர் மேலே தன் பேச்சைத் தொடரவில்லை. அவன் பேச்சை மாற்றினன். உனக்காக ஒரு ஸ்பெஷல் டுடெக்ஸ் ஒரு சினேகிதர் மூலம் வரவழைத்திருக்கிறேன் பார், பாரிஸிலிருந்து அசந்து போய்விடுவாய் ! என்ன கலர் ! அத் தோடு என்ன இனிமையான மணமும் சேர்த்திருக்கிருன் தெரியுமா ?” ஆவலின் பெயர் சாந்தியாயிற்று. நிஜமாகவா ? ...எங்கே, எடுங்கள் ! மெரினவின் கார் பாதையில் வாகனத்தைத் திருப்பும் வரை மெளனமாயிருந்த சங்கர், ஒரு அவுன்ஸ்கூட இருக்காது. அத் தனை சின்னஞ்சிறு புட்டி விலை எவ்வளவு இருக்கும் சொல், பார்க்கலாம் ! ’ பாரிஸிலிருந்து வாங்கி வந்ததா ? அரை விழியை மூடி யோசனை செய்தாள் சாந்தி. என்ன...எக்ஸ்சேஞ்ஜ் விகிதப்படி பார்த்தால், அதிகபட்சம் நூறு ரூபாயாவது இருக்கும் ! ’’ இருநூற்று எழுபத்தைந்து!" என்று எழுத்து எழுத்தாகப் பிரித்து உச்சரித்த சங்கர், கார்களுக்கு நடுவில் வண்டியை நிறுத்திவிட்டு, தன் காதலியைக் கர்வத்துடன் நோக்கினன். எடுங்களேன் சீக்கிரம் !" என்று சாந்தி துடித்தாள்.

  • ஆபீஸில் மறந்து வைத்துவிட்டேன். அதுதான் வருத்தமா யிருக்கிறது,' என்ருன் சங்கர். பரவாயில்லை நாளை சாயங் காலம் கொண்டு வருகிறேன்?'

' மறந்து விடாதீர்கள். கூட்டம் பேச்சு என்று என்னென் னவோ வேறே வைத்துக்கொண்டிருக்கிறீர்களே ?' என்ருள் சாந்தி கவலையுடன்