பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 63 சாந்தி பிறந்த நாள் ' பூகம்பமேயானலும் என் சாந்தியை மறந்துவிடுவேளு?’’ என்றவன், சந்தண சோப்புக்கட்டி போன்ற சாந்தியின் மோவா யைத் தொட்டு நிமிர்த்தினன். ஒரு பந்தயம் வைத்து, பிறகு அதைக் கொடுக்கலாமா என்று இப்போது தோன்றுகிறது !' என்ருன்.

  • பந்தயமா? என்ன பந்தயம் !'

சாந்தி திகைத்தாள் : “ டேய் பையா ஐஸ் கிரீம் ' என்று காருக்குள்ளிருந்த வாறே கையைத் தட்டி அழைத்தான் சங்கர். பிறகு சாந்தியிடம் திரும்பி, சொல்லப் பயமாயிருக்கிறது...ஒன்றுமில்லை...நாளை சாயந்தரத்துக்குள் மூன்று சிட்டம் நூல், ராட்டையில் நூற்றுக் காட்டு பார்க்கலாம் !" என்ருன். ' ஒகோன்ளுைம் ! ’’ என்று கழுத்தை வெட்டினுள் சாந்தி அலட்சியமாக உங்களுக்கு நடுநடுவே வருகிறதே ஒரு பைத் தியம், அதிலே என்னையும் மாட்ட இப்படி ஒரு சூழ்ச்சியா ?” சாந்தி...பந்தயம் சும்மாதான். உனக்கும்தான் ஒரு பயிற்சி வரட்டுமே ! "

  • வேண்டாம், வேண்டாம் ! அதைவிடப் புத்திசாலித்தன மான வேறு ஆயிரம் பயிற்சி இருக்கிறது. அதையெல்லாம் கற் றுக் கொண்ட பிறகு உங்களிடம் வருகிறேன். ' என்று சாந்தி கடுகடுப்பாகப் பதில் சொல்கையில், ஐஸ்கிரீம் வண்டி வந்து விடவே, சாக்லேட் கிரீம்தானே, சாந்தி ? இரண்டு எடப்பா,’’ என்ருன் சங்கர்,

காரின் இந்தண்டைப் பக்கத்தில் ஒரு பிச்சைக்காரப் பெண் வந்து நின்று, அம்மா...மகாலக; மி...தாயே...' என்று பல்லவி பாடினுள். வெறுப்புடன் தன் வெல்வெட் கைப் பையைத் திறந்தாள் சாந்தி. சே ! வரவர மெரினுகூடச் சுத்த நியூசென்ஸாகி விட்டது. ஹிண்டு லட்டர்ஸ் டு தி எடிட்டருக்கு ஒரு கார்டு எழு திப் போடப்போகிறேன் ! ஒரு பத்துப் பைசா நாணயத்தைத் தூக்கி எறிவதற்காகத் திரும்பிய சாந்தி, சரேலெனப் பின்னடைந் தாள. ஒரு விடிை பிரமித்து, பேச்சற்று, அசைவற்றிருந்தாள். பின் னர், வீசி எறியவிருந்த நாணயத்தைப் பயபக்தியுடன் மெல்ல அந்த ஏழைப் பெண்ணிடம் கொடுத்தாள். -