பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா. கி. ரங்கராஜன் 87 ' பாதி ஐஸ்கிரீம் கரைந்து விட்டது. பிடி, ' என்று நீட்டிய சங்கர், அவள் முகத்தோற்றத்தில் காணப்பட்ட மாறுதலினல் அதிர்ச்சி அடைந்தவனுக, என்ன சாந்தி ? நான் என்ன அப்ப டித் தப்பாகப் பேசிவிட்டேன் ? சும்மா ஒரு விளையாட்டுப் பந்த யம்தானே ?’ என்று சமாதானம் செய்ய முயன்ருன். அதெல்லாம் ஒன்றுமில்லை...வேறே...' என்று கூறிய சாந்தி, ஐஸ்கிரீமை வாங்கிக்கொண்டு சுவைக்கலாள்ை! ஆனால், நீளப் பரந்து கிடக்கும் நீலக் கடலைச் சுவைக்க வில்லை : மனத்தின் மணவாளனின் அண்மையிலுள்ள தனிமை யின் இன்பத்தைச் சுவைக்கவில்லை : குழந்தையின் ஸ்பரிசம் போல உடலைப் புளகம் கொள்ளச் செய்யும் காற்றைச் சுவைக்க வில்லை; அவள் கண்கள் எங்கோ யோசனையில் சொக்கியிருந்தன. அவளுடைய அமைதியைக் குலைத்துவிட்ட குற்றம் சங்கரின் உள்ளத்தில் குறுகுறுத்தது. சிலுசிலுவென்று காற்று வீசுகிறதே? போகலாமா ? ' என்ருன் ஏமாற்றத்துடன். ' ஆமாம், என்று பதிலளித்த சாந்தி, தலைகுனிந்து தன் கைகளையும் விரல்களின் செக்கச் சேவேலென்ற நகப் பூச்சையும் பார்த்தவாறேயிருந்தாள். கார் மவுண்ட்ரோடு வழியே நீந்திக் கொண்டிருந்தபோது, திடீரென, சர்க்கா எங்கே கிடைக்கும் ? அங்கே நிறுத்துங்கள் கொஞ்சம்,' என்ருள், சாந்தி. என் மீதுள்ள கோபத்துக்காக எதுவும் செய்ய வேண்டாம்,' என்று சங்கர் மன்ருடிஞன். 1. நீங்கள் ஒன்று ! எனக்கே ஆசையா யிருக்கிறது, ' என்று சிரித்தவாறு சாந்தி சொன்னபோதிலும் அவன் சற்றுத் தயங்கிய வாறேதான் கடையின் வாசலில் நிறுத்தினன் காரை. - விற்பனைப் பகுதியிலிருந்த பெண், சாந்தி புதிதாக நூற்கக் கற்பவள் என்று அறிந்ததும், சுலபமாக வேலை செய்யும் பல வித சர்க்காக்களை எடுத்துக் காட்டி, விளக்கிளுள். ஆனல், சாந்தி, பழைய மாடல் ராட்டினமொன்றையே தேர்ந்தெடுத் தாள். பஞ்சு வாங்கிக்கொண்டு, பட்டை போடுவது போன்ற சில்லறை வேலைகளைச் சுருக்கமாகத் தெரிந்துகொண்டதும், " போகலாம்,' என்ருள் சங்கரிடம்: