பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 சாந்தி பிறந்த நாள் என்ன இதெல்லாம்? ' என்று பங்களாவில் அவள் படி யேறியபோது பெரியப்பா கேட்டார், ராட்டையையும் மற்றக் கருவிகளையும் பார்த்து. ' ரொம்ப வருத்திக் கொள்ளாதே, சாந்தி, உனக்காகவே இஷ்டமானல், முடிந்தவரையில் மட்டும் செய், போதும். பந்தயம் கிந்தயமெல்லாம் கடற்கரையிலேயே காற்றில் விட்டுவிட்டேன்,' என்ருன் சங்கர். இருவருக்கும் புன்னகையின் மூலமே பதிலளித்துவிட்டு உள்ளே சென்று விட்டாள் சாந்தி. மறுநாள் மாலை சங்கர் வழக்கம் போல் பங்களாவுக்குள் நுழைந்த போது, ஓடிவந்து வரவேற்புக் கொடுக்கும் சாந்தியைக் காணவில்லை. குறுக்கும் நெடுக்குமாக உலாவிக் கொண்டிருந்த பெரியப்பா, அவனைக் கொஞ்சம் கோபமாகவே பார்த்தார், ஏதோ கண்டிக்கிற பாவனையில். விழாவில் கலந்துகொண்டு, அதற்கேற்ற ஜிப்பா வேட்டி கோலத்தில் வந்ததைக் கண்டதால் வேறே அவருக்குக் கோபம் வந்தது போலும், 'நேற்று நீங்கள் சாந்திக்கு என்ன உபதேசம் செய்தீர்களோ போங்கள் ! நல்ல கூத்தடிக்கிருள் இன்று முழுதும் ! ’’ என்ருர். சங்கர் பதறியவகை, ஏன் ? ஏன் ? என்ன பண்ணினன்? என்று கேட்டர்ன். அதை நீங்களே போய்ப் பாருங்கள். அறைக்குள் கதவைத் தாளிட்டுக் கொண்டு ராட்டையும் கையுமாய் உட்கார்ந்து கொண்டவள்தான். எழுந்திருக்கவேயில்லை ! தண்ணிர், ஆகாரம் கூடக் கிடையாது 1 அடடா ! என்று கூவிய சங்கர், தாவியேறி மாடியை அடைந்து, ' சாந்தி கதவைத் திற! திற! என்று படபடவெனத் தட்டினன். இதோ ஆயிற்று கொஞ்சம் பொறுங்கள்!' என்று சாந்தி பதில் கொடுத்தாள். . ஐந்து நிமிடம் பொறுத்துக் கதவைத் தட்ட அவன் மீண்டும் கையை உயர்த்திய சமயம், கதவு திறந்து கொண்டது. சாந்தி, ஒவ்வோர் அங்கமும் தளர்ந்து தொய்ய, களப்பும் தள்ளாமையுமாக வெளிப்பட்டாள். ஆனால், வதனத்தில் அபூர்வ மான், தெய்வீகமான களைதென்பட்டது, -